90,000 பேர் வெளியேற்றம்

90,000 பேர் வெளியேற்றம்

2 mins read
98a9ecda-5dd6-4e0a-a83b-f6dce420208c
மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ் -

கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 138ஆக உயர்ந்தது

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் கன­ம­ழை­யா­லும் அத­னால் ஏற்­பட்ட வெள்­ளத்­தா­லும் நிலச்­ச­ரி­வு­க­ளி­லும் சிக்கி குறைந்­தது 138 பேர் இறந்து விட்­ட­னர்.

கடந்த சில நாள்­க­ளா­கப் பல மாவட்­டங்­களில், குறிப்­பாக கொங்­கன் பகு­தி­யில் இடை­வி­டாது கொட்­டித் தீர்த்த மழை­யால் பல இடங்­களில் வெள்­ளம் சூழ்ந்­தது.

ராய்­காட் மாவட்­டம், தலியே கிரா­மத்­தில் மட்­டும் நிலச்­ச­ரி­வில் சிக்கி குறைந்­தது 37 பேர் மாண்டு போயி­னர். சத்­தாரா மாவட்­டத்­தில் வெள்­ளத்­தில் பலர் அடித்­துச் செல்­லப்­பட்­ட­னர். அங்கு இது­வரை 27 மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கோலாப்­பூர் மாவட்­டத்­தில் 40,882 பேர் உட்­பட மொத்­தம் 89,333 பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இதை­ய­டுத்து, மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்­கரே ராய்­காட்­டிற்கு நேற்று நேரில் சென்று, நிலை­மை­யைப் பார்­வை­யிட்­டார்.

இந்­நி­லை­யில், உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பத்­தார்க்கு டுவிட்­டர் வழி­யாக ஆறு­தல் தெரி­வித்­துள்ள பிர­த­மர் நரேந்­திர மோடி, மகா­ராஷ்­டி­ரா­வில் நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் பாதிக்­கப்­பட்­டோர்க்­குத் தேவை­யான உதவி­களை வழங்கி வரு­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார். அது­போல, அதி­பர் ராம்­நாத் கோவிந்­தும் மகா­ராஷ்­டிர ஆளு­நர் பகத்­சிங் கோஷ்­யா­ரி­யைத் தொலை­பே­சி­வழி தொடர்புகொண்டு, உயிர், உடைமைச் சேதங்களுக்காக வருத்தம் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, அண்டை மாநி­ல­மான கோவா­வி­லும் கன­மழை பெரும் சேதத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது. அங்கு ஒரு­வர் இறந்­து­விட்­டார்; கிட்­டத்­தட்ட ஆயி­ரம் வீடு­கள் சேத­ம­டைந்­து­விட்­டன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தாழ்­வான பகு­தி­களை வெள்­ளம் சூழ்ந்­தி­ருப்­ப­தால் நூற்­றுக்­கணக்­கா­னோர் வீடு­க­ளை­விட்டு வெளி­யேறி, பாது­காப்­பான இடங்­களில் தஞ்­சம் அடைந்­துள்­ள­னர்.

கர்­நா­டக மாநி­லத்­தி­லும் கன­மழை கார­ண­மாக மூவர் மாண்டு விட்­ட­னர்.