தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷில்பா: என் கணவர் அப்பாவி; கிளுகிளுப்பும் ஆபாசமும் வேறு வேறு

1 mins read
596bc8b7-d0d9-4097-82f3-30996f5f4702
-

மும்பை: தம் கண­வர் அப்­பாவி என்­றும் அவர் ஆபா­சக் காணொ­ளி­க­ளைத் தயா­ரிக்­க­வில்லை என்­றும் நடிகை ஷில்பா ஷெட்டி காவல்­து­றை­யி­ன­ரி­டம் சொன்­ன­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

ஆபா­சக் காணொ­ளி­க­ளைத் தயா­ரித்து, அவற்­றைக் கைபே­சிச் செய­லி­கள் மூலம் வெளி­யிட்ட சந்­தே­கத்­தின்­பே­ரில் ஷில்­பா­வின் கண­வர் ராஜ் குந்த்ரா உட்­பட 11 பேரைக் கடந்த வாரம் மும்பை காவல்­துறை கைது செய்­தது. இதில் குந்த்­ரா­விற்கு முக்­கி­யப் பங்கு இருப்­ப­தா­கத் தோன்­று­கிறது என்று மும்பை போலிஸ் ஆணை­யர் ஹேமந்த் நாக்­ராலே தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், இதன் தொடர்­பில் ஷில்­பா­வி­டம் நேற்று முன்­தினம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

அப்­போது 'ஹாட்­ஷாட்ஸ்' செய­லிக்­கும் தமக்­கும் தொடர்­பில்லை என்­றும் தம் கண­வர் உரு­வாக்­கிய கைபே­சிச் செய­லி­யில் இடம்­பெற்ற அம்­சங்­கள் குறித்து தனக்கு எது­வும் தெரி­யாது என்­றும் ஷில்பா கூறி­ய­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

தம் கண­வர் அப்­பாவி என்­றும் ஆபா­சக் காணொ­ளித் தயா­ரிப்­பில் தம் கண­வர்க்­குப் பங்­கில்லை என்­றும் பாலி­யல் ஆசை­யைத் தூண்­டும் கிளு­கி­ளுப்­பான காணொ­ளி­யும் ஆபா­சக் காணொ­ளி­யும் வெவ்­வேறு என்­றும் அவர் கூறி­னா­ராம்.

ராஜ் குந்த்­ரா­வின் மைத்­து­ன­ரான, லண்­ட­னில் இருக்­கும் பிர­தீப் பக்­‌ஷி­தான் அந்­தச் செய­லிக்­கும் அதன் செயல்­பாட்­டிற்­கும் பொறுப்பு என்­றும் ஷில்பா கூறி­னார் என்று அதி­கா­ரி­கள் சொன்­ன­தாக 'ஏஎன்ஐ' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இத­னி­டையே, ராஜ் குந்த்ரா, ரையன் தோர்ப் ஆகி­யோ­ரின் போலிஸ் காவல் நாளை மறு­நாள்­வரை நீட்­டிக்கப்பட்டுள்­ளது. இதை­ அடுத்து, தாம் கைது செய்­யப்­பட்­டதை எதிர்த்து குந்த்ரா மும்பை உயர் நீதி­மன்­றத்தை நாடி­யுள்­ளார்.