துப்பாக்கியுடன் தற்படம்; குண்டு பாய்ந்து பெண் உயிரிழப்பு

துப்பாக்கியுடன் தற்படம்; குண்டு பாய்ந்து பெண் உயிரிழப்பு

1 mins read
2c948c10-11d5-4a96-b7b5-ce7145f7b494
-

லக்னோ: துப்­பாக்­கி­யு­டன் தற்­ப­டம் எடுக்க முயன்­ற­போது தவ­று­தலாகத் துப்­பாக்­கி­யின் விசையை அழுத்­தி­விட, கழுத்­தில் குண்டு பாய்ந்து 26 வய­துப் பெண் மாண்டுபோன சம்­ப­வம் உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், ஹர்­தோய் மாவட்­டத்­தில் நிகழ்ந்­தது.

உயி­ரி­ழந்த ராதி­கா­வின் (படம்) மாம­னா­ரான ராஜேஷ், அவ­ருக்­கும் தம் மகன் ஆகா­ஷிற்­கும் இவ்­வாண்டு மே மாதம்­தான் திரு­ம­ணம் நடந்­த­தா­கக் கூறி­னார்.

உத்­த­ரப் பிர­தேச உள்­ளாட்­சித் தேர்­தல் கார­ண­மாக தம்­மி­டம் இருந்த துப்­பாக்­கியை உள்­ளூர்க் காவல் நிலை­யத்­தில் தாம் ஒப்­படைத்து இருந்­த­தாக ராஜேஷ் கூறி­னார்.

இந்­நி­லை­யில், கடந்த வியா­ழக்­கி­ழமை பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் காவல் நிலை­யத்­திற்­குச் சென்று துப்­பாக்­கி­யைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்டு வந்­தார் ஆகாஷ்.

மாலை 4 மணி­ய­ள­வில் வீட்­டின் மாடி­யில் இருந்து துப்­பாக்கி­யால் சுடும் சத்­தம் கேட்­டது. அதைத் தொடர்ந்து, அனை­வ­ரும் விரைந்து சென்று பார்க்க, அங்கு ராதிகா ரத்த வெள்­ளத்­தில் கிடந்­துள்­ளார்.

அரு­கி­லேயே அவர் தற்­ப­டம் எடுத்­த­ நிலையிலேயே அவ­ரது கைபேசி­யும் காணப்பட்டது.

அந்­தத் துப்­பாக்­கி­யு­டன் ஏற்­கெனவே புகைப்­ப­டம் எடுத்­துள்­ள­போ­தும் அதை மீண்டும் காண தம் மனைவி மிக­வும் ஆர்­வ­மாக இருந்­த­தாக ஆகாஷ் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, வர­தட்­ச­ணைக் கொடு­மை­யால் தம் மகள் இறந்­தி­ருக்­க­லாம் எனக் கூறி, ராதி­கா­வின் தந்தை காவல்­து­றை­யிடம் புகார் அளித்­துள்­ளார்.

ஆனால், குண்டு பாய்ந்தது தவிர ராதி­கா­வின் உட­லில் வேறு எந்­தக் காயமும் இல்லை என்று உடற்­கூ­ராய்வு முடி­வு­கள் கூறு­வதா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.