புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் இருநாள் அதிகாரபூர்வப் பயணமாக நாளை மறுநாள் 27ஆம் தேதி இந்தியா செல்லவுள்ளார். மறுநாள் 28ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுவார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ஆப்கானிஸ்தான் பிரச்சினை, பருவநிலை மாற்றம், சீனா, மனித உரிமை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்தும் பேசப்படும் என்று உறுதியாக நம்புவதாகக் கூறிய அமெரிக்கா, அந்தப் பிரச்சினையை அந்நாடுகளே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வருகை
1 mins read
-

