மும்பையில் விழுந்த மின்தூக்கி - அறுவர் பலி

மும்பையில் விழுந்த மின்தூக்கி - அறுவர் பலி

1 mins read
ff2f9abb-62e4-4efd-bb1c-595560110f42
-

மும்பையின் மத்திய பகுதியிலுள்ள வொர்லி பகுதியில் கட்டப்பட்டுக்கொண்ருந்த கட்டடம் ஒன்றின் மின்தூக்கி இடிந்து விழுந்ததில் ஆறு பேர் மடிந்தனர்.

இதன் தொடர்பில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதன்பேரில் கட்டட குத்தகையாளரும் மேற்பார்வையாளரும் கைது செய்யப்பட்டனர்.

மாண்ட அந்த அறுவருக்கு தலைக்கவசம், பாதுகாப்பு வார்கள் உள்ளிட்ட கருவிகள் கொடுக்கப்படவில்லை என்று போலிசார் விசாரணையின்மூலம் தெரிய வந்துள்ளது.