மோடி: இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துங்கள்

புது­டெல்லி: இந்­தியா வளர்ச்­சியை நோக்கி நடை­போட, அனை­வ­ரும் ஒற்­று­மை­யாக இருந்து பணி­யாற்ற வேண்­டும் என பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

இயற்­கை­யை­யும் சுற்­றுச்­சூழலைப் பாரா­ம­ரிப்­ப­தும் பேணு­வ­தும் இந்­தி­யர்­க­ளின் கலா­சா­ரம் என்­றும் அன்­றாட வாழ்க்­கை­யி­லும் இது அடங்­கி­யுள்­ளது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நேற்று வானொலி மூலம் 'மன் கி பாத்' நிகழ்ச்சி வழி நாட்டு மக்­கள் மத்­தி­யில் உரை­யாற்­றிய போதே பிர­த­மர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

"மழை­நீ­ரின் மகத்­து­வத்தை உணர்ந்து, வானி­லி­ருந்து வரும் ஒவ்­வொரு துளி மழை­நீ­ரை­யும் பாது­காக்க வேண்­டும். இந்த வழக்­கம் நமது பாரம்­ப­ரி­யத்­தில் இருக்­கிறது. மழை­நீர் பாது­காப்­பும் பரு­வ­நி­லை­யும் நம்­மு­டைய எண்­ணங்­களை, தத்­து­வங்­களை, கலா­சா­ரத்தை சீரமைக்கும்," என்­றார் மோடி.

அடுத்­து­வ­ரும் பண்­டி­கை­க­ளுக்கு இப்­போதே தமது வாழ்த்­து­க­ளைத் தெரி­விப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், பண்­டி­கைக் கால கொண்­டாட்­டத்­தின்­போது கொரோனா தொற்று நம்­மை­விட்­டுச் செல்­ல­வில்லை என்­பதை அனை­வ­ரும் மன­தில் கொள்ள வேண்­டும் என்­றார்.

ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­களில் பங்­கேற்­றுள்ள இந்­திய வீரர்­க­ளுக்கு நாட்டு மக்­கள் ஆத­ர­வாக இருக்க வேண்­டும் என்­றும் வீரர்­களை ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.

"ஒலிம்­பிக் தொடக்க விழா­வில் நம் வீரர்­கள் தேசி­ய கொடி ஏந்­திச் சென்­ற­தைப் பார்த்­த­போது நான் மட்­டு­மல்ல, மொத்த தேச­மும் உற்­சா­க­ம­டைந்­தது. ஒட்­டு­மொத்த தேச­மும் ஒன்­றாக இணைந்து, வீரர்­க­ளுக்கு வெற்றி கிடைக்­கட்­டும் என வாழ்த்த வேண்­டும்.

"ஒலிம்­பி்­க்­கில் இந்­தி­யா­வின் வெற்றி ஏற்­கெ­னவே தொடங்­கி­விட்­டது. அனை­வ­ரும் தங்­க­ளின் அபி­மா­ன வீரர்­க­ளின் வெற்­றி­யைப் பகிர்ந்து இந்­தி­யாவை உற்­சா­கப்­ப­டுத்த வேண்­டும்," என்­றார் பிர­த­மர் மோடி.

இன்று கார்­கில் போர் நினை­வு­தினம் அணு­ச­ரிக்­கப்­படு­கிறது என்று குறிப்­பிட்ட அவர், கார்­கில் போர் என்­பது இந்­திய ராணுவ வீரர்­க­ளின் ஒழுக்­கம், தியா­கம் ஆகி­ய­வற்­றைக் குறிக்­கிறது என்­றார்.

"இந்த நாளை இந்­தியா அம்­ருத் மகோத்­சவ் என்று கொண்­டா­டு­கிறது. இந்த நாளில் கார்­கில் போரில் உயிர்த்­தி­யா­கம் செய்த வீரர்­க­ளுக்கு வீர­வ­ணக்­கம் செலுத்­து­கி­றேன்," என்று பிர­த­மர் மோடி மேலும் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!