வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா: பெண் எம்பிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை

ஹைத­ரா­பாத்: தேர்­த­லில் வாக்­களிக்க வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணப் பட்­டு­வாடா செய்த குற்றச்­சாட்­டின் கீழ் தொடுக்­கப்­பட்ட வழக்­கில் தெலுங்­கானா ராஷ்­டி­ரிய சமிதி கட்சி பெண் எம்பி கவி­தா மலோத்துக்கு நம்­பள்ளி அமர்வு நீதி­மன்­றம் ஆறு மாத சிறைத்­தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இத்­த­கைய குற்­றத்­துக்­காக தண்­டனை பெறும் முதல் நாடாளு­மன்ற உறுப்­பி­னர் இவர்­தான்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­த­லில் மஹபு­பா­பாத் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார் கவிதா. எனி­னும் அவர் வாக்­கா­ளர்­க­ளுக்கு தேர்­த­லுக்கு முன்பு பணப்­பட்­டு­வாடா செய்­த­தா­கப் புகார் எழுந்­தது.

இது­கு­றித்து எதிர்க்­கட்­சி­கள் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யதை அடுத்து வழக்கு தொடுக்­கப்­பட்­டது.

இந்த வழக்கை நாடா­ளு­மன்ற, சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர்­கள் மீதான வழக்கை விசா­ரிக்­கும் சிறப்பு நீதி­மன்­றம் விசா­ரித்து வந்­தது. இதில் கவிதா தமது தொகுதி­யில் உள்ள வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணம் கொடுத்­தது உறு­தி­யா­ன­தாக நீதி­மன்­றம் அறி­வித்­தது.

மேலும், கவிதாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பண விநியோகத்தில் கவிதாவுக்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் அவரது உதவியாளரும் ஆறு மாத சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்கும் பிணை வழங்கியுள்ளார் நீதிபதி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!