கறுப்புப் பூஞ்சை நோய்: 45,000 பேர் பாதிப்பு; 4,300 பேர் பலி

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் 45 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் கறுப்­புப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்­டாம் அலை தொடங்­கி­யது முதல் பதி­வாகி உள்ள எண்­ணிக்­கை­யா­கும்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சுமார் 85 விழுக்­காட்­டி­னர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் என்­றும் இவர்­களில் 4,300 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர் என்­றும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்த நாடு­க­ளை­விட சுமார் 80 மடங்கு அதி­கம் என்ற போதி­லும், இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை கறுப்புப் பூஞ்சை நோய் என்­பது அரிய வகை பாதிப்­பா­கவே கரு­தப்­ப­டு­கிறது.

கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் தொடங்­கிய பிறகே கறுப்­புப் பூஞ்சை நோய் குறித்த பேச்­சும் விழிப்­பு­ணர்­வும் இந்தி­யா­வில் அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளன.

கறுப்­புப் பூஞ்சை நோயா­னது முகத்­தில்தான் அதி­க­மான, நிரந்­த­ர­மான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கிறது. குறிப்­பாக கண்­பார்­வை­யைப் பறிக்­கும் இந்­நோ­யால் உயி­ரி­ழப்­பும் ஏற்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வில் அதி­க­ளவு பாதிப்பு­களை ஏற்­ப­டுத்தி உள்ள இந்த நோய் நேப்­பா­ளம், ஆப்­கா­னிஸ்­தான், எகிப்து, ஓமன் உள்­ளிட்ட நாடு­களி­லும் சிலரை பாதித்­துள்­ள­தாக அந்­நா­டு­க­ளின் சுகா­தார அமைச்­சு­கள் தெரி­வித்­துள்­ளன.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தில்­தான் இந்­தி­யா­வில் கறுப்புப் பூஞ்சை நோயின் முதல் அலை பர­வத் தொடங்­கி­யது.

தற்போ­தைய நில­வ­ரப்­படி, குறைந்த, மத்­திய வரு­வாய் உள்ள நாடு­களில் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கொரோனா தொற்­றும் அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில் கறுப்­புப் பூஞ்சை நோயின் தாக்­க­மும் உல­கம் முழு­வ­தும் அதி­க­ரிக்­கும் என அந்த அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

கொரோனா பெருந்­தொற்­றுக்கு முன்­னர், இந்­தி­யா­வில் ஆண்­டு­தோ­றும் சுமார் மூன்று முதல் நான்­கா­யி­ரம் பேருக்கு பூஞ்சை நோய் தாக்­கம் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்டு வந்­த­தாக மத்­திய சுகா­தார அமைச்­சர் மன்­சுக் மாண்­டவ்யா தெரி­வித்­துள்­ளார்.

அச்­ச­ம­யம் நோய்­வாய்­ப்பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கையை மாநில அர­சு­கள் உட­ன­டி­யாக மத்­திய அர­சி­டம் தெரி­விக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. எனி­னும் கடந்த மே மாதம் பாதிப்­பு­கள் அதி­க­ரிக்­கவே இதில் மாற்­றம் ஏற்­பட்­டது.

கடந்த ஜூன் மாதம் 40,845 ஆக இருந்த பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யா­னது, அடுத்த இரு வாரங்­களில் ஒன்பது விழுக்­காடு அதி­க­ரித்து 45,374 என கூடி­யது. இவர்­களில் சரி­பா­திப் பேர் இன்­னும் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர் என்­கிறது மத்­திய சுகா­தார அமைச்சு.

கறுப்­புப் பூஞ்சை நோயி­லி­ருந்து உட­ன­டி­யாக விடு­ப­டு­வது சாத்­தி­யம் அல்ல. மனித உட­லில் பாதிக்­கப்­பட்­டுள்ள திசுக்­களை அறுவை சிகிச்சை மூலம் அகற்­று­வ­து­தான் சிறந்த வழி.

கடந்த மே மாதம் நோயா­ளி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­ததை அடுத்து சிகிச்சை அளிக்க போது­மான மருந்­துகள் இல்லை எனப் பல்­வேறு மாநில அர­சு­கள் தெரி­வித்­தன. இதை­ய­டுத்து உள்­நாட்­டி­லேயே மருந்துகளைத் தயா­ரிக்க மத்­திய அரசு ஏற்­பா­டு­க­ளைச் செய்­துள்­ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சரிபாதிப் பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!