மூன்று வகை தொற்றுகள்: தவிக்கும் கேரளா

திருவனந்தபுரம்: கொரோ­னா­வால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறை­யாத நிலை­யில், கேர­ளா­வில் மீண்­டும் பற­வைக் காய்ச்­சல் வேகமா­கப் பரவி வரு­கிறது. அங்கு கோழி­கள் திடீ­ரென கொத்­துக் கொத்­தாக இறந்து போவ­தாக ஊடகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஏற்­கெ­னவே கொரோனா பிடியில் சிக்­கி­யுள்ள கேர­ளா­வில் ‘ஸிக்கா’ பாதிப்­பும் உள்­ளது. இப்­போது பற­வைக் காய்ச்­சல் பரவுவதாக செய்­தி­ வெளியாகி உள்­ளது.

கேர­ளா­வின் கோழிக்­கோடு மாவட்­டத்­தில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான கோழிப்­பண்ணையில் முந்­நூ­றுக்­கும் மேற்­பட்ட கோழி­கள் திடீ­ரென கொத்து கொத்­தாக இறந்­துள்­ளன. அவற்றின் ரத்த மாதி­ரி­கள் பரி­சோ­திக்­கப்­பட்­ட­போது, அவை பறவைக் காய்ச்­சல் பாதிப்­பால் இறந்­தது தெரி­ய­வந்­தது.

இதற்­கி­டையே, கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் மீண்­டும் 18 ஆயிரத்­துக்­கும் மேற்­பட்­டோர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த ஐம்­பது நாள்­களில் இல்­லாத வகை­யில் சனிக்­கி­ழமை புதிய தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 18,531ஆக பதி­வாகி உள்­ளது. மேலும் 98 பேர் பலி­யாகி­விட்­ட­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!