வடமாநிலங்களில் பருவ மழை தீவிரம்

வடமாநிலங்களில் பருவ மழை தீவிரம்

1 mins read
f3391bbf-8a0f-4635-b57b-9cd0d1e73e9d
-

வடமாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அண்மைய சில தினங்களாக கனமழை நீடித்து வருகிறது. மழை காரணமாக மின்னல் தாக்கி, நிலச்சரிவு, வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பலத்த மழை பெய்தததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியதை அடுத்து, வாகனமோட்டிகள் நேற்று கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்கிடையே, பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டிலும் மும்பை மாநகரம் பருவ மழையால் தத்தளிக்கிறது. அங்கு மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர். படம்: ஏஎஃப்பி