பயணங்கள் மேற்கொள்ள 28% மக்கள் ஆர்வம்

311 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் தகவல்

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் மெல்ல கட்­டுக்­குள் வரு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில், இந்­தி­யா­வில் பொது­மக்­கள் பய­ணம் மேற்­கொள்­வ­தில் ஆர்­வம் காட்­டத் தொடங்கி உள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் நடத்­தப்­பட்ட அண்­மைய ஆய்­வின்­போது சுமார் 28 விழுக்­காட்­டி­னர் எதிர்­வ­ரும் ஆகஸ்ட், செப்­டம்­பர் மாதங்­களில் பய­ணம் மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­டுள்­ளது தெரிய வந்­துள்­ளது.

நாடு தழு­விய அள­வில் 311 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 18 ஆயி­ரம் பேரி­டம் பய­ணங்­கள் தொடர்­பாக பல்­வேறு கேள்­வி­கள் கேட்­கப்­பட்டு, விவ­ரங்­கள் சேக­ர­கிக்­கப்­பட்­டன. இவர்­களில் 68 விழுக்­காட்­டி­னர் ஆண்­கள் ஆவர்.

இந்­தி­யா­வில் கொரோனா மூன்­றா­வது அலை ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் அதி­கம் உள்­ள­தாக நிபு­ணர்­கள் கூறி வரு­கின்­ற­னர். எனி­னும், இத்­த­கைய முன்­க­ணிப்­பு­களும் எச்­ச­ரிக்­கை­களும் இந்­திய மக்­க­ளின் பயண ஆர்­வத்­துக்குத் தடை­யாக அமை­ய­வில்லை எனத் தெரி­கிறது.

பய­ணம் மேற்­கொள்ள திட்ட­மிட்டுள்ளவர்களில் ஐந்து விழுக்­காட்­டி­னர் ஏற்­கெ­னவே பய­ணம், தங்­கு­வ­தற்­கான முன்­ப­திவை உறுதி செய்­துள்­ள­னர்.

இதே வேளை­யில் இந்த ஆய்­வில் பங்­கேற்ற 9,146 பேர் (63%) அடுத்த இரு மாதங்­களில் எங்­கும் பய­ணம் மேற்­கொள்ள திட்­ட­மி­ட­வில்லை என்­றும் 9 விழுக்­காட்­டி­னர் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை என்­றும் தெரி­வித்­துள்­ள­னர்.

"பய­ணங்­க­ளால் கொரோனா தொற்­றின் மூன்­றா­வது அலை ஏற்­படும் வாய்ப்­பு­கள் உள்­ளன. எனவே, அவ­சி­ய­மற்ற பய­ணங்­க­ளைக் கைவி­டு­வது தொடர்­பில் மக்­கள் மத்­தி­யில் அர­சாங்­கம் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும்," என ஆய்வை நடத்­திய அமைப்பு வலி­யு­றுத்தி உள்­ளது.

ஆய்வு முடி­வு­களை மத்­திய, மாநில அர­சு­க­ளு­டன் பகிர்ந்து­கொள்­ளப் போவ­தா­க­வும் மூன்­றா­வது அலை­யைக் கட்­டுப்­படுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கை­க­ளைத் திட்­ட­மிட இத்­த­க­வல்­கள் உத­வி­யாக இருக்­கும் என நம்­பு­வ­தா­க­வும் அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

என்ன கார­ணத்தை முன்­னிட்டு பய­ணங்­களை மேற்­கொள்­கி­றார்­கள் என்ற கேள்­விக்கு, 13 விழுக்­காட்­டி­னர் விடு­மு­றைக்கு ஏற்ற இடத்­துக்­குச் சென்று மகிழ்ச்­சி­யாக பொழு­தைக் கழிக்க விரும்­பு­வ­தாக கூறி­யுள்­ள­னர்.

39 விழுக்­காட்­டி­னர் உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளைக் காண விரும்­பு­வ­தா­க­வும் 22 விழுக்­காட்­டி­னர் பய­ணங்­கள் குறித்து வேறு திட்­டங்­களை வகுத்­தி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்கிடையே, இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 39,361 பேருக்கு கிருமி தொற்றி உள்ளது. 416 பேர் தொற்றால் இறந்துவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!