காஷ்மீரில் 41 முறை ஊடுருவிய ஆளில்லா விமானங்கள்

ஸ்ரீந­கர்: ஜம்மு, காஷ்­மீ­ரில் சிறிய ரக ஆளில்லா விமா­னங்­கள் மூலம் தாக்­கு­தல் நடத்த பயங்­க­ர­வா­தி­கள் திட்­ட­மி­டு­வது பாது­காப்பு படை­களுக்கு புதிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது என காவல்­துறை தலை­வர் தில்­பக் சிங் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம்­தான் முதன் முறை­யாக இந்­திய எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­யில் ஆளில்லா விமா­னம் மூலம் பயங்­க­ர­வா­தி­கள் தாக்­குல் நடத்­தி­ய­தாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

காஷ்­மீர் எல்­லைப் பகு­தி­யில் இது­வரை 41 முறை ஆளில்லா விமா­னங்­கள் அத்­து­மீறி நுழைந்­துள்­ளன என்­றும் 31 முறை அவற்றை இடை­ம­றித்து தடுத்­துள்­ள­தா­க­வும் தில்­பக் சிங் கூறி­னார்.

“முதன்­மு­றை­யாக ஆளில்லா விமான ஊடு­ரு­வ­லைப் பார்த்­த­போது ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது. எனி­னும் பிறகு எதிர்­ந­ட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தில் திறன் பெற்று விட்­டோம்.

“பாகிஸ்­தான் அர­சுத்­த­ரப்­பைச் சேர்ந்த சிலர், பயங்­க­ர­வா­தி­களின் தேவை­களை நிறை­வேற்ற ஆளில்லா விமா­னங்­கள் மூலம் ஆயு­தங்­கள், வெடி­பொ­ருள்கள், ரொக்­கப் பணம் ஆகி­ய­வற்றை அனுப்­பு­கின்­ற­னர்.

கடந்த பிப்­ர­வரி மாதம் எல்­லை­யில் அமை­தியைக் கடைப்பி­டிக்க இரு நாடு­களுக்கு இடையே ஒப்­பந்­தம் ஏற்­பட்­டது. ஆனால் பாகிஸ்­தான் அதை மீறு­கிறது,” என்­றார் தில்­பக் சிங்.

கடந்த 23ஆம் தேதி, இந்­திய படை­க­ளால் எல்­லை­யில் சுட்டு வீழ்த்­தப்­பட்ட சிறிய ரக ஆளில்லா விமா­னத்­தில் ஐந்து கிலோ எடை­கொண்ட வெடி­குண்டு இருப்­பது தெரி­ய­வந்­தது. அதை காஷ்­மீ­ரின் மக்­கள் நட­மாட்­டம் அதி­கம் உள்ள பகுதியில் வெடிக்­கச் செய்து, பலத்த உயிர்­ இழப்பை ஏற்­ப­டுத்த ஜெய்ஷ் இ முக­மது திட்­ட­மிட்டு இருந்­த­தாக இந்­திய உள­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!