ஸ்ரீநகர்: கார்கில் போர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. போரில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த 559 இந்திய வீரர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 559 விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன.
அங்கு அதிபர் ராம்நாத் கோவிந்த், முப்படைத் தளபதி பிபின் ராவத், தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (படம்) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.