132 நாள்களில் ஆகக் குறைவான பாதிப்பு

132 நாள்களில் ஆகக் குறைவான பாதிப்பு

2 mins read
c055ad8d-d62e-44e5-8af3-6267a5991810
மும்பையில் உள்ள ஒரு மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கும் பொதுமக்கள். கோப்புப்படம்: ஊடகம் -

அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 30,000க்கும் கீழ் பதிவானது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் மெல்ல கட்­டுக்­குள் வரும் நிலை­யில், கடந்த 132 நாள்­களில் இல்­லாத வகை­யில் அன்­றாட தொற்று எண்­ணிக்­கை­யா­னது 30 ஆயி­ரத்­துக்­கும் கீழ் பதி­வாகி உள்­ளது.

நேற்று முன்­தி­னம் நாடு முழு­வ­தும் புதி­தாக 29,689 பேருக்கு கிருமி தொற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதன் மூலம் கொரோனா பாதிப்­புக்­காக சிகிச்­சை­யில் இருப்­போ­ரின் மொத்த எண்­ணிக்கை நாட்­டில் 398,100ஆக உள்­ளது. இந்த எண்­ணிக்­கை­யும் கடந்த 124 நாள்­களில் பதி­வான ஆகக்­கு­றை­வா­ன­தா­கும். சுமார் நான்கு மாதங்­க­ளுக்­குப் பிறகு மருத்­து­வ­ம­னை­யில் இருப்­போர் எண்­ணிக்கை 400,000க்கும் கீழ் வந்­துள்­ளது.

இதற்­கி­டையே கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று மேலும் 415 பேர் தொற்­றுப் பாதிப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இதை­ய­டுத்து மர­ண­ம­டைந்­தோர் மொத்த எண்­ணிக்கை 421,382 ஆக உயர்ந்­துள்­ளது.

இந்­தி­யா­வில் இது­வரை 441,912,395 பேருக்கு கொரோனா தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

கொரோனா இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் கேர­ளா­வி­லும் மகா­ராஷ்­டி­ரா­வி­லும் கடு­மை­யாக உள்­ளது. கேர­ளா­வில் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை எதிர்­பார்த்த அளவு குறை­ய­வில்லை.

அங்கு கடந்த திங்­கட்­கி­ழமை மேலும் 11,586 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. அன்­றைய தினம் 135 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

பத்து மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி: சாதித்த மகா­ராஷ்­டிரா

இதற்­கி­டையே, நாட்டிலேயே முதல் மாநி­ல­மாக சுமார் 10 மில்­லி­யன் பேருக்கு இரண்டு தவணை தடுப்­பூ­சி­க­ளையும் போட்­டுள்­ளது மகா­ராஷ்­டிரா. அங்கு கொரோனா தடுப்­பூசி போடும் பணி­கள் தீவி­ர­மாக நடந்து வரு­கின்­றன.

அம்­மா­நி­லத்­தில் திங்­கட்­கி­ழமை புதி­தாக 6,843 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. 123 பேர் மர­ணம் அடைந்­த­னர். மொத்த மரண எண்­ணிக்கை 131,552ஆகக் கூடி­யுள்­ளது.

பூஸ்­டர் ஊசி தேவைப்­ப­ட­லாம்

உரு­மா­றிய கொரோனா பாதிப்­பில் இருந்து தப்பிக்க மூன்­றா­வ­தாக ஒரு பூஸ்­டர் ஊசி போட்­டுக்­கொள்ள வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்­கு­நர் ரன்­தீப் குலே­ரியா கூறி­யுள்­ளார்.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறையும்போது அதனை ஈடுகட்டும் வகையில் மூன்றாவது ஊசி போட்டுக் கொள்வது நல்லது என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் பூஸ்டர் ஊசி போடும் பணிகள் இந்தியாவில் தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.