எல்லையில் மீண்டும் கூடாரங்கள் அமைக்கும் சீனா: இந்தியா எதிர்ப்பு

எல்லையில் மீண்டும் கூடாரங்கள் அமைக்கும் சீனா: இந்தியா எதிர்ப்பு

1 mins read
f04dc7aa-b895-4239-82f3-35a234c9ae2a
-

ஸ்ரீந­கர்: கிழக்கு லடாக் பகு­தி­யில் சீன ராணு­வத்­தி­னர் மீண்­டும் கூடா­ரங்­கள் அமைப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அங்­குள்ள டெம்­சோக் பகு­தி­யில் சீன ராணு­வத்­தின் இந்த அத்­து­மீ­றல் நிகழ்ந்­துள்­ள­தாக ஊட­கங்­களில் செய்தி வெளி­யாகி உள்­ளது.

அண்­மைய சில மாதங்­க­ளாக இந்­திய-சீன எல்­லைப் பகு­தி­களில் பதற்­றம் நிலவி வரு­கிறது. இரு­தரப்­புக்­கும் இடையே நிகழ்ந்த சிறிய அள­வி­லான மோத­லில் உயி­ரி­ழப்­பு­களும் ஏற்­பட்­டன. இது­வரை நாடு­க­ளின் அதி­கா­ரி­கள் மட்­டத்தி­லான 11 சுற்று பேச்­சு­வார்த்­தை­கள் முடிந்­துள்ளன. எல்­லை­யில் குவித்­துள்ள துருப்­புக்­களை திரும்­பப் பெறு­வது என முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் சீன ராணு­வம் மீண்­டும் எல்­லைப் பகு­தி­யில் கூடா­ரங்­களை அமைப்­பது இந்­திய தரப்­புக்கு ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது.

ஹாட் ஸ்பி­ரிங்ஸ், கோக்­ரா, டெப்­சாங் உள்­ளிட்ட பகு­தி­கள் இரு­த­ரப்­புக்­கும் இடையே மோத­லுக்கு வித்­தி­டக்­கூ­டிய பகு­தி­க­ளாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. எனவே, இப்­ப­கு­தி­களில் குவிக்­கப்­பட்­டுள்ள வீரர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது குறித்து பேச்­சு­வார்த்தை தொடங்கி உள்­ளது.

டெம்­சோக்­கின் சார்­டிங் நாலா பகு­தி­யில் சீனர்­கள் அமைத்­துள்ள கூடா­ரங்­கள் உட­ன­டி­யாக அகற்­றப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­படும் என மூத்த ராணுவ அதி­காரி தெரி­வித்­துள்­ள­தா­க­வும் அப்­ப­கு­தி­யில் இந்­திய ராணு­வம் கண்­கா­ணிப்­பைத் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் ஊட­கச் செய்தி மேலும் தெரி­வித்­துள்­ளது.