எடியூரப்பா விலகல்: காங்கிரஸ், பாஜக வார்த்தைப் போர்

எடியூரப்பா விலகல்: காங்கிரஸ், பாஜக வார்த்தைப் போர்

2 mins read
bb50dd88-1c88-4c2f-8143-c2998ea0409a
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக முதல்­வர் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தாக அறி­வித்­த­போது எடி­யூ­ரப்பா கண்­ணீர் சிந்­தி­யது ஏன்? என காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்தி கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இது குறித்து கர்­நா­டக பாஜக உரிய விளக்­கம் அளிக்க வேண்­டும் என்று அவர் தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ள­தாக தினத்­தந்தி ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

மாநில முதல்­வர் கண்­ணீர் சிந்­தும்­போது, ஒரு குடி­ம­க­னாக அது குறித்து கேட்க தமக்கு உரிமை உண்டு என்று குறிப்­பிட்­டுள்ள ராகுல், ஒரு கட்­சி­யின் மூத்த தலை­வர் இது­போன்று கண்­ணீர் விடு­வது அவ­ரது கட்­சி­யின் மனப்­பான்­மை­யைக் காட்­டு­கிறது என்று விமர்­சித்­துள்­ளார்.

"அந்­தக் கட்­சி­யின் தலை­வர்­கள் காங்­கி­ரஸ் தலை­வர்­கள் பற்றி பேசு­வதை நிறுத்த வேண்­டும்.

வரு­மான வரித்­துறை, சிபிஐ ஆகி­ய­வற்­றைக் குறிப்­பிட்டு பதவி வில­கு­மாறு எடி­யூ­ரப்பா மிரட்­டப்­பட்­டி­ருக்­க­லாம்.

"உங்­கள் பீஷ்­மரை அம்­புப்­படுக்­கை­யில் படுக்க வையுங்­கள். வெற்­றி­க­ர­மாக பத­வியை முடிக்க வேண்­டி­ய­வர்­கள், அரசு நிகழ்­வில் மேடை­யில் கண்­ணீ­ரு­டன் விடை ­பெற்று உள்­ளார்," என்று ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

மாநில முதல்­வர் குறித்து பேசு­ப­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கா­மல், அவர்­களை வளர்த்து விடு­வ­து­தான் பாஜக என்ற கட்­சி­யின் ஒழுக்­கம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், கர்­நா­ட­கா­வில் பாஜக ஆட்­சி­யால் சோர்ந்­து­போன மக்­கள் மொத்த அர­சாங்­கத்­தை­யும் மாற்­றத்­தான் விரும்­பு­கி­றார்­களே தவிர, தலைமை மாற்­றத்தை மட்டு­மல்ல என்று கூறி­யுள்­ளார்.

பதவி வில­கு­வ­தற்குக் கார­ணம் நிர்­வா­கத் தோல்­வியா?, மன உளைச்­சலா? மிரட்­டலா? அச்­சு­றுத்­தலா? கீழ்­ப­டி­யா­மையா? கண்­ணீ­ரு­டன் பதவி விலக என்ன கார­ணம் என்­பதை எடி­யூ­ரப்பா மாநில மக்­க­ளுக்கு விளக்­கு­வாரா?" என்­றும் ராகுல் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இதற்­கி­டையே, காந்தி குடும்ப அடி­மை­க­ளுக்கு ஜன­நா­ய­கம் பற்றி பேச தார்­மீக உரிமை இல்லை என காங்­கி­ரஸ் கட்­சிக்கு கர்­நா­டக பாஜக பதி­லடி கொடுத்­துள்­ளது.

கட்­சி­யின் சித்­தாந்­தத்­திற்கு உட்­பட்டு முதல்­வர் பத­வி­யில் இருந்து எடி­யூ­ரப்பா வில­கி­யுள்­ளார் என்­றும் காந்தி குடும்ப அடி­மை­க­ளின் பேச்­சைக் கேட்­கும் நிலை­யில் பாஜக இல்லை என்­றும் கர்­நா­டக பாஜக தெரி­வித்­துள்­ளது.

எடி­யூ­ரப்­பா­வுக்கு ஆத­ர­வாக பேசு­வது போல காங்­கி­ர­சார் முத­லைக் கண்­ணீர் சிந்­து­வ­தா­க­வும் காங்­கி­ர­சார் முத­லில் தங்­கள் கட்­சிக்கு ஒரு தலை­வரை நிய­மிப்­ப­தில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் கர்நாடகா பாஜக மேலும் கூறி­யுள்­ளது.