மகாராஷ்டிரா: கனமழைக்கு 192 பேர் பலி; 800 பாலங்கள் சேதம்: மிதக்கும் வட கர்நாடகா

2 mins read
039d5028-01a7-44fc-9279-b9ea8bd2d434
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் மழை, வெள்­ளம் கார­ண­மாக பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை 192ஆக அதி­க­ரித்­துள்­ளது. மேலும், மாநி­லம் முழு­வ­தும் சுமார் 800 பாலங்­களும் 290 சாலை­களும் கடு­மை­யா­கச் சேத­ம­டைந்­துள்­ளன.

அண்­மை­யில் இரு தினங்­க­ளுக்கு இடை­வி­டா­மல் பெய்த மழை­யால் கொங்­கன், மேற்கு மராட்­டிய மாவட்­டங்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் ராய்­காட், ரத்­ன­கிரி, சிந்­து­துர்க், கோலாப்­பூர், சாங்­கிலி, சத்­தாரா, தானே, பால்­கர் ஆகிய மாவட்­டங்­கள் வெள்­ளக்­காடாக மாறி­விட்­ட­தா­க­வும் அம்­மா­நில முதல்­வர் அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­வர்­கள், நிலச்­ச­ரி­வில் புதைந்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 192ஆக அதி­க­ரித்­துள்­ளதை உறுதி செய்த முதல்­வர் அலு­வ­ல­கம், இச்­சம்­ப­வங்­களில் 56 பேர் படு­கா­யம் அடைந்­துள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

வெள்­ளப் பாதிப்பு மோச­மாக உள்ள பகு­தி­களில் இருந்து இது­வரை 229,074 பேர் வெளி­யேற்­றப்­பட்டு பாது­காப்­பான இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் சேத­ம­டைந்த பாலங்­கள், சாலை­க­ளைச் சீர­மைக்­கும் பணி துரி­தப்­ப­டுத்­தப்­படும் என்­றும் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே உறுதி அளித்­துள்­ளார்.

மாநி­லம் முழு­வ­தும் சுமார் ஒரு மில்­லி­யன் மின் இணைப்­பு­கள் துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில், அவற்­றுள் சுமார் 650,000 இணைப்­பு­கள் உட­ன­டி­யாக சரி­செய்­யப்­பட்­ட­தாகவும் அவர் தெரி­வித்­துள்­ளார். கடும் சேதங்­க­ளைச் சந்­தித்­துள்ள 746 கிரா­மங்­க­ளுக்கு குடி­நீர் விநி­யோ­கம் நடந்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, தொடர் மழை கார­ண­மாக மகா­ராஷ்­டிர எல்­லையை ஒட்­டி­யுள்ள வட கர்­நா­டக மாவட்­டங்­களும் கடும் பாதிப்­பு­களை எதிர்­கொண்­டுள்­ளன.

யாதகிரி, ஹாவேரி, பெல­காவி, பாகல்­கோட்டை ஆகிய மாவட்­டங்­களில் கன­மழை நீடித்து வரு­வ­தா­க­வும் கிருஷ்ணா, வேத­கங்கா, துத்­கங்கா, சிரண்­ய­கேஷி உள்­ளிட்ட ஆறு­களில் கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு உள்­ளது என்­றும் கர்­நா­டக அரசு தெரி­வித்­துள்­ளது.

மேற்­கு­றிப்­பிட்ட மாவட்­டங்­களில் உள்ள பெரும்­பா­லான கிரா­மங்­கள் வெள்­ளத்­தில் மிதப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.