இந்தியாவின் சட்டங்களுக்குப் புறம்பாகக் கருதப்படும் டுவிட்டர் நிறுவனம், அங்கு குறைகூறல்களுக்கு ஆளாகும் நேரத்தில் உள்ளூர் தளமான 'கூ'வை அந்நாட்டின் அமைச்சர்களும் அரசாங்க அதிகாரிகளும் முன்னிறுத்த முனைகின்றன.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 'கூ' தளத்தில் கணக்கு ஒன்று திறந்தது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கடுமையாகப்பட்ட புதிய விதிமுறைகளுடன் சமூக ஊடக நிறுவனங்கள் ஒத்துப்போகுதல் குறித்த மறுஆய்வு ஒன்றை டுவிட்டரில் அறிவிக்காமல் அந்தத் தளத்தில் அறிவித்துள்ளார்.
டுவிட்டருக்கு மாற்றுச் சேவை ஒன்றை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று பெயர் வெளியிடப்படாத அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் குறித்த பொய்த்தகவலைப் பரப்புவதாகக் கூறப்படும் டுவிட்டர் கணக்குகளை அகற்ற அந்நிறுவனம் மறுத்ததை அடுத்து இந்திய அரசாங்கம் பிப்ரவரியன்று கண்டித்துள்ளது. அத்துடன், டுவிட்டரைப் போல அன்றி 'கூ', எட்டு இந்திய மொழிகளில் படைப்புகளை ஏற்க முடிகிறது. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, அசாம் மற்றும் மராட்டிய மொழிகள் அவை. இந்தச் செயலிக்கான பதிவிறக்கங்கள் இரண்டு நாட்களுக்குள் மூன்று மில்லியனைத் தாண்டியது.

