மோடி: இந்திய, அமெரிக்க உறவு உலக நலனுக்கான சக்தி

மோடி: இந்திய, அமெரிக்க உறவு உலக நலனுக்கான சக்தி

2 mins read
0ee70687-5956-4c88-b24e-313de15c0667
புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் (இடது). படம்: ஏஎஃப்பி -

பிளிங்கன்: இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதே எங்களது முக்கிய கொள்கை

புது­டெல்லி: இந்­தியா-அமெ­ரிக்கா இடை­யே­யான உறவை வலுப்­படுத்து­வ­தில் அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் உறு­தி­யு­டன் இருப்­பதை வர­வேற்­ப­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்பாக டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், இரு ­நா­டுகளின் உற­வா­னது அனைத்­து­லக நல­னுக்­கான சக்­தி­யா­க­வும் ஜன­நா­யகப் பண்­பு­க­ளுக்­கான ஆணி­வே­ரா­க­வும் உள்­ளது எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இந்­தியா வந்த அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன் நேற்று பிர­த­மர் மோடி, வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர், தேசிய பாது­காப்பு ஆலோ­சகா் அஜித் தோவல் ஆகி­யோரை அடுத்­த­டுத்து சந்­தித்­துப் பேசி­னார்.

இச்சந்திப்பு நல்­ல­வி­த­மாக அமைந்­த­தா­க­வும், இந்­தியா-அமெ­ரிக்கா இடை­யே­யான ராணுவ உறவை வலுப்­ப­டுத்த உறு­தி­பூண்டுள்ள அதி­பர் ஜோ பைட­னின் நிலைப்­பாட்டை தாம் வர­வேற்­ப­தா­க­வும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

ஜன­நா­ய­கம், சுதந்­தி­ரம் ஆகி­ய­வற்­றைக் காப்­ப­தில் அமெ­ரிக்க, இந்­திய சமூ­கங்­கள் ஆழ­மான உறுதியைப் பகிர்ந்து வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், இரு­த­ரப்பு உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அமெ­ரிக்­கா­வில் உள்ள இந்­தி­யர்­களின் சிறப்­பான செயல்­பா­டு­கள் முக்­கி­ய கார­ணம் என்­றார். கொரோனா நெருக்­கடி, உலகப் பொரு­ளா­தார மீட்சி, பரு­வ­நிலை மாற்­றம் ஆகி­ய­வற்­றில் இந்­தி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் இணைந்து செயல்­ப­டு­வது வருங்­கா­லத்­தில் முக்­கி­யத்­து­வம் பெறும் எனப் பிர­த­மர் மோடி நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.இதற்­கி­டையே, இந்­தி­யா­வு­ட­னான உறவை வலுப்­ப­டுத்த வேண்­டும் என்­பது அமெ­ரிக்­கா­வின் முக்­கிய வெளி­யு­ற­வுக் கொள்­கை­யாக உள்ளது என அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்­சர் ஆண்­டனி பிளிங்­கன் கூறி­னார்.

இந்­தி­யா­வும் அமெ­ரிக்­கா­வும் இணைந்து 21ஆம் நூற்­றாண்­டுக்கு வடி­வம் கொடுத்து வரு­வ­தா­க­வும் எனவே இந்­தி­யா­வு­ட­னான உறவு அமெ­ரிக்­கா­வுக்கு முக்­கி­யம் என்றும் அவர் தெரி­வித்­தார்.

இந்­திய வெளி­யு­றவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இணைந்து செய்தி­யாளர்களைச் சந்­தித்­த­போதே ஆண்டனி பிளிங்­கன் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

முன்­ன­தாக ஆப்­கா­னிஸ்­தானின் பாது­காப்பு நில­வ­ரம், இந்­திய-பசிபிக் வட்­டா­ரத்­தில் இரு­த­ரப்பு ஒத்­துழைப்பு, கொரோனா தொற்றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட முக்­கிய அம்­சங்­கள் தொடர்­பில் இந்­தி­யா­வுக்கு அமெ­ரிக்கா ஆத­ரவு வழங்­கு­வது குறித்து அமைச்­சர் ஜெய்­சங்­க­ரு­டன் அவர் விரி­வான பேச்­சு­வார்த்­தை­யில் ஈடு­பட்­டார்.

இதை­ய­டுத்து டுவிட்­ட­ரில் பதி­விட்ட அவர், இந்­தி­யா­வும் அமெரிக்­கா­வும் ஜன­நா­யகப் பண்­பு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கும் நாடு­கள் எனக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இது­தான் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான உற­வின் அடித்­த­ள­மா­க­வும் நாட்­டின் பன்­மு­கத்­தன்மை வாய்ந்த சமூ­கத்­தின் பிர­தி­ப­லிப்­பா­க­வும் உள்­ளது," என்று ஆண்­டனி பிளிங்­கன் தெரி­வித்­துள்­ளார்.