இமாச்சலப் பிரதேசம், காஷ்மீரில் மேகவெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசம், காஷ்மீரில் மேகவெடிப்பு: 16 பேர் உயிரிழப்பு

1 mins read
1c6aff53-8466-44ec-8886-ff7ff7f91848
-

சிம்லா: மேக­வெ­டிப்பு கார­ண­மாக கொட்­டித்­தீர்த்த கன­ம­ழை­யால் இமா­ச்ச­லப் பிர­தே­சம், காஷ்­மீர், லடாக் உள்­ளிட்ட பகு­தி­கள் கடுமை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இது­வரை 16 பேர் பலி­யாகி­விட்­ட­னர்.

குறிப்­பிட்ட ஓரி­டத்­தில் ஒரு­மணி நேரத்­தில் நூறு மில்­லி­மீட்­டர் அள­வி­லான மழை பதி­வா­கிறது எனில் அதற்கு மேக­வெ­டிப்­பு­தான் கார­ணம் என நிபு­ணர்­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் இமாச்சலப்­ ­பி­ர­தே­சத்­தில் இவ்­வாறு பலத்த மழை பெய்­தது.

அங்கு நீடித்து வரும் கன­மழை, வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக ஒன்­பது பேர் உயி­ரிழந்­து­விட்­டனர். மூன்று பேரை காண­வில்லை. பலி­யா­ன­வர்­களில் ஏழு பேரின் உடல்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அங்கு மீட்­புப் பணி­கள் நீடித்து வரு­கின்­றன.

காஷ்­மீ­ரில் ஏழு பேர் பலி­யாகி­விட்ட நிலை­யில், மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

நேற்று முன்­தி­னம் அங்­குள்ள கிஷ்த்­வார் மாவட்­டத்­தின் கடைக்­கோடிப் பகு­தி­யான ஹொன்­சார் கிரா­மத்­தில் காலை சுமார் 4.30 மணிக்கு பலத்த மழை பெய்­யத் தொடங்­கி­யது. இரண்டு மணி நேரங்­க­ளுக்­குக் கொட்­டித்­தீர்த்த மழை­யால் அப்­ப­கு­தி­யில் உள்ள பாலம் பலத்த சேத­ம­டைந்­தது.

இரண்டு பெண்­கள் உள்­பட ஏழு பேர் பலி­யா­கி­னர். 17 பேர் காயம் அடைந்­துள்­ள­தா­க­வும் காணா­மல் போன 14 பேர் தேடப்­பட்டு வரு­வ­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. லடாக் பகு­தி­யி­லும் கன­மழை பெய்­தது என்ற போதி­லும், அங்கு உயி­ரு­டற் சேதங்­கள் ஏதும் இல்லை.

அமர்­நாத் குகைக்­கோ­வில் அருகே மேக­வெ­டிப்­பால் பெரு மழை பெய்­தது என்­றும் இத­னால் கோவி­லுக்கு எந்­த­வித சேத­மும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.