தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிலைகள் உட்பட 14 கலைப் பொருள்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் ஆஸ்திரேலியா

2 mins read
ca4fee8b-a43d-4f10-b723-4c3ea9384f6d
ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ள கலைப்பொருள்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஞானக்குழந்தை திருஞான சம்பந்தர் சிலையும் அடங்கும். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இருந்து பல்­வேறு கால­கட்­டங்­களில் கடத்­தப்­பட்டு, பின்­னர் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் விற்­கப்­பட்­டுள்ள சிலை­களை மீண்­டும் இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்க அந்­நாடு முடிவு செய்­துள்­ளது.

இதன் மூலம் சோழர்­கால சிலை­கள் உட்­பட பல கோடி ரூபாய் மதிப்­புள்ள 14 கலைப் பொருள்­கள் மிக விரை­வில் இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட உள்­ளன.

தமி­ழ­கம் மட்­டு­மல்­லா­மல் நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள கோவில்­களில் இருந்து நிறைய சிலை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன. பின்­னர் அவை பெரும் தொகைக்கு வெளி­நா­டு­களில் உள்­ள­வர்­க­ளுக்கு விற்­கப்­பட்­டுள்­ளன.

சிலைக் கடத்­தல் மன்­னன் என்று குறிப்­பி­டப்­படும் சுபாஷ் கபூர், வில்­லி­யம் மோல்ப் ஆகிய இரு­வ­ரும் நிறைய சிலை­களைக் கடத்தி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்­தியா­வுக்குச் சொந்­த­மான இத்­த­கைய சிலை­களை மீட்க மத்­திய, மாநில அர­சு­கள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் சுபாஷ் கபூ­ரி­டம் இருந்து வாங்­கப்­பட்ட சோழர்­கால சிலை­கள் உட்­பட 14 கலைப் பொருள்­களை இந்­தி­யா­வி­டம் ஒப்படைக்க ஆஸ்­தி­ரே­லிய அரசு முடிவு செய்­துள்­ளது.

இவை அனைத்­தும் அந்­நாட்டின் தேசிய அருங்­காட்­சி­ய­கத்­தில் காட்சிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

இவை அனைத்­தும் முறை­கே­டான வழி­களில் நாட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டதை அறிந்த ஆஸ்­தி­ரே­லிய அரசு, அச்­சி­லை­களை அங்­கி­ருந்து அகற்­று­வ­தாக முடிவு செய்­துள்­ளது.

இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா இடையே உள்ள உற­வின் அடிப்­படை­யில், கலா­சார ரீதி­யான பொருள்­களைத் திருப்பிக் கொடுப்­பதில் பெரு­மைப்­ப­டு­வ­தாக அ­ருங்­காட்­சி­யக இயக்­கு­நர் நிக் மிட்­செ­விச் கூறி­யுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லிய அர­சின் இந்த முடிவை வர­வேற்­ப­தாக இந்­தியா தெரி­வித்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் இருந்து கடத்­தப்­பட்ட திருஞான­சம்­பந்­தர் சிலை­கள் இரண்­டும் கூட ஒப்­ப­டைக்­கப்­படும் பொருள்­க­ளின் பட்­டி­ய­லில் உள்­ளன.