பாட்னா: நேப்பாளத்தில் இருந்து நேற்று முன்தினம் பீகார் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஒருவரிடம் இருந்து 11 சிறிய ரக ஆளில்லா விமானங்கள் (டிரோன்) பறிமுதல் செய்யப்பட்டன.
பினய் குமார் என்ற அந்த ஆடவர் பீகாரின் எல்லையோர மாவட்டமான மதுபனி பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவரது காரை சோதனையிட்டபோது ஆளில்லா விமானங்கள் இருப்பது தெரியவந்தது என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மதுபனியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கும் பொருட்டு அந்த சிறிய ரக விமானங்களை காருக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையின்போது பினய் குமார் கூறி உள்ளார். அவர் யாருக்காக இச்செயலில் ஈடுபட்டார், பீகாரில் ஏதேனும் சதி வேலைக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று பீகாரில் மூன்று கடத்தல்காரர்களிடம் இருந்து எட்டு சிறிய ரக ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

