தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது'

1 mins read
30189c68-b51b-4138-aeb3-9259e283c6be
-

மதுரை: இலங்கை அக­தி­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்க இய­லாது என்று நீதி­மன்­றத்­தில் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­திற்கு அக­தி­க­ளாக வந்த இலங்கை தமி­ழர்­கள் தங்­க­ளுக்கு இந்­திய குடி­யு­ரிமை வழங்க வேண்­டும் என்று உயர்­நீ­தி­மன்ற மதுரை கிளை­யில் மனுத்தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.

"தற்­போது தமி­ழ­கத்­தில் நாங்­கள் குடி­யி­ருக்­கி­றோம். எங்­க­ளது பூர்­வீ­கம் தமிழ்­நா­டு­தான், எங்­க­ளது முன்­னோர்­கள் வணி­க­ரீ­தி­யாக இலங்­கைக்கு சென்­றார்­கள், தற்­போது அங்கு நில­வும் அர­சி­யல் சூழல் கார­ண­மாக மீண்­டும் அக­தி­க­ளாக நாங்­கள் தமி­ழ­கம் திரும்பி விட்­டோம், எனவே எங்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்க உத்­த­ர­விட வேண்­டும் என்று அவர்­கள் மனு­வில் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

இந்த மனுவை கடந்த 2019ஆம் ஆண்டு நீதி­பதி சுவா­மி­நா­தன் விசா­ரணை செய்து இலங்கை தமி­ழர்­க­ளுக்கு குடி­யு­ரிமை வழங்­கு­வ­தில் உங்­க­ளுக்கு என்ன பிரச்­சனை இருக்­கி­றது? அவர்­க­ளது மனுவை பரி­சீ­லனை செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என உத்­த­ரவு பிறப்­பித்தார்.

இந்த உத்­த­ரவை எதிர்த்து தற்­போது உயர்நீதி­மன்ற மதுரை கிளை­யில் தலைமை நீதி­பதி அமர்வு முன் மத்­திய அரசு மேல் முறை­யீடு செய்­தது.

இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தபோது "இலங்­கை­யிலி­ருந்து தமிழகம் வந்த அக­தி­கள் சட்­ட­வி­ரோ­த­மாக குடி­யே­றி­ய­வர்­கள்.

"எனவே அவர்­க­ளுக்கு இந்­திய குடி­யு­ரிமை வழங்க முடி­யாது," என்று மத்­திய அரசு தெரி­வித்ததாக தினத்­தந்தி வெளி­யிட்ட தக­வல் தெரி­விக்­கிறது.