எதிர்க்கட்சிகள் அமளி; சபாநாயகர் வேதனை

எதிர்க்கட்சிகள் அமளி; சபாநாயகர் வேதனை

2 mins read
38d556ea-7faf-43a1-b562-3347b71ab0be
சபாநாயகர் ஓம் பிர்லா, தனது வேதனையை வெளிப்படுத்தியுள் ளார். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

புதுெடல்லி: நாடா­ளு­மன்ற மழைக்­கால கூட்­டத்­தொ­டர் இம்­மா­தம் 19ஆம் தேதி தொடங்­கி­ய­தி­லி­ருந்து பெகா­சஸ், வேளாண் சட்­டங்­கள், விலை­வாசி உயர்வு உள்­ளிட்ட பிரச்­சி­னை­களை முன்­வைத்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் இரு அவை­க­ளை­யும் முடக்கி வரு­கின்­ற­னர்.

சென்ற புதன்­கி­ழமை, குறிப்­பாக காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த குர்­ஜீத் அஜாலா, பிர­தா­பன், ஹிபி ஈடன் உள்­ளிட்ட எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் அவை அலு­வல் குறிப்­பு­கள் அடங்­கிய காகி­தங்­கள் மற்­றும் முழக்­க­வரி எழு­தப்­பட்ட அட்­டை­களை கிழித்து சபா­நா­ய­கர் இருக்­கையை நோக்கி வீசி­னர்.

இதைப்­போல ஆளுங்­கட்சி எம்.பி.க்கள் இருந்த பகு­தியை நோக்­கி­யும் அவர்­கள் வீசி­னர்.

இத­னால் அவை­யில் பெரும் கூச்­ச­லும் குழப்­ப­மும் ஏற்­பட்­டது. எனவே அவை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளின் இந்த போராட்­டத்­தின்­போது சபா­நா­ய­கர் ஓம் பிர்லா அவை­யில் இல்லை.

இத­னால் மறு­நாள் அவர் அவை­யில் தனது வேத­னையை வெளி­யிட்­டார்.

"அவை­யில் நடந்த நிகழ்­வு­கள் எனக்கு வேத­னையை கொடுத்­துள்­ளன. இத்­த­கைய சம்­ப­வங்­கள் நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரா­னவை," என்று திரு ஓம் பிர்லா கூறி­யுள்­ளார்.

"நாடா­ளு­மன்ற பாரம்­ப­ரி­யத்­துக்கு ஒவ்­வாத செயல்­கள் மீண்­டும் அரங்­கே­றக்­கூ­டாது என்று கூறிய அவர், தவ­றி­னால் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று எச்­ச­ரித்­தார்.

அப்­போது மக்­க­ளவை காங்­கி­ரஸ் தலை­வர் ஆதிர் ரஞ்­சன் சவுத்ரி எழுந்து, "எங்­கள் கருத்­து­களை அவை­யில் வெளிப்­ப­டுத்த அரசு அனு­ம­திக்­க­வில்லை," என குற்­றம் சாட்­டி­னார்.

உடனே நாடா­ளு­மன்ற விவ­கார அமைச்­சர் பிர­க­லாத் ஜோஷி, நேற்றைய (புதன்­கி­ழமை) சம்­ப­வத்தைக் குறித்து மட்­டும் பேசு­மாறு வலி­யு­றுத்­தி­னார்.

இத­னால் ஆளுங்­கட்சி மற்­றும் எதிர்க்­கட்­சி­யி­ன­ரி­டையே மீண்­டும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்டு அவை ஒத்தி ­வைக்­கப்­பட்­டது.

இது பற்றி பேசிய காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜூன கார்கே, ''கைத்தொலைபேசி ஒட்­டு­கேட்பு ஒரு தேசத் துரோ­கம். நாடா­ளு­மன்­றம் அமை­தி­யாக நடக்க வேண்­டும் என்­றால் அது பற்றி இங்கு விவா­திக்க வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

காங்­கி­ரஸ் மூத்த தலை­வ­ரான ராகுல்­காந்தி, "எதிர்க்­கட்­சி­கள் நாட­மா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களை சீர்­கு­லைக்­க­வில்லை. தங்­கள் கட­மை­யைத்­தான் செய்­கின்­றன. 'பெகா­சஸ்' உளவு விவ­கா­ரம், எங்­களை பொறுத்­த­வரை தேசி­யம், தேசத் துரோ­கம் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை ஆகும். நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­க­ளின் குரல் நசுக்­கப்­ப­டு­கிறது," என்று குறிப்­பிட்­டு உள்­ளார்.