நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் கைது செய்யப்பட்டதற்கு போலிசார் விளக்கம்

2 mins read
bbc2eb96-dff9-4bcf-81bd-8e4f823c1a0f
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா, பெண்களை மிரட்டி ஆபாசக் காணொளிகளை தயாரித்து விற்று பணம் சம்பாதித்ததாக போலிசார் கூறுகின்றனர். படம்: டைம்ஸ்நவ் இணையப் படம் -

மும்பை: பிர­பல இந்தி நடிகை ஷில்பா ஷெட்­டி­யின் கண­வ­ரும் தொழில் அதி­ப­ரு­மான ராஜ்­குந்த்ரா, 45, விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கா­த­தால் அவர் கைது செய்­யப்­பட்­டார் என்று போலி­சார் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ள­னர்.

ராஜ்­குந்த்ரா ஆபாச காணொ­ளி­க­ளைத் தயா­ரித்து கைத்­தொ­லை­பேசி செய­லி­களில் பதி­வேற்­றம் செய்து அதன் மூலம் ஏரா­ள­மாக பணம் சம்­பா­தித்­தா­கக் கூறி அவரை மும்பை குற்­றப்­பி­ரிவு போலி­சார் கடந்த 19ஆம் தேதி கைது செய்­த­னர்.

அவ­ரது போலிஸ் காவல் முடிந்­ததை அடுத்து அவர் நீதி­மன்றக் காவ­லில் வைக்­கப்­பட்­டார்.

இந்த நிலை­யில் பிணை வழங்­க­கோரி அவர் தாக்­கல் செய்த மனுவை மாவட்ட நீதி­மன்­றம் தள்ளு ­படி செய்­துள்­ளது.

இதை எதிர்த்து ராஜ்­குந்த்ரா சார்­பில் உயர்­நீ­தி­மன்­றத்­தில் மேல் முறை­யீடு மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

மேல்­மு­றை­யீட்டு மனு­வில் தொழில் அதி­பர் ராஜ் குந்த்­ராவை கைது செய்ய முறை­யாக அழைப்­பா­ணையோ, கைது ஆணையோ அனுப்­பப்­ப­ட­வில்லை என தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் இதனை மறுத்­துள்ள போலி­சார், "ராஜ்­குந்த்­ராவை கைது செய்­வ­தற்கு முன்பு அவ­ருக்கு முறை­யாக கடி­தம் அனுப்­பப்­பட்­டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து­ விட்­டார். அவர் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்கவில்லை. மேலும் ஆதா­ரங்­கள் அழிக்­கப்படு­வ­தைத் தடுக்க அவர் உட­ன­டி­யாகக் கைது செய்­யப்­பட்­டார்," என்று கூறி­­னர்.

ஆபாசப் படங்­களை தயா­ரித்து, கைபேசிச் செய­லி­களில் வெளி­யிட்டு கோடிக்­க­ணக்­கில் பணம் சம்­பா­தித்த குற்­றச்­சாட்­டின் பேரில் அவர் போலி­சா­ர் விசாரணைக்குள் வந்து உள்ளார்.

கடந்த பிப்­ர­வரி மாதம் சில பெண்­களை, தங்­களை இணையத் தொட­ரில் நடிக்க அழைத்து ஆபாச படத்­தில் நடிக்க வைத்து மோசடி செய்­த­தாக அளித்த புகா­ரின்­பே­ரில் மும்பை குற்­றப்­பி­ரிவு போலி­சார் சிலரை கைது செய்தனர்.

அவர்­க­ளி­டம் நடத்திய விசா­ர­ணை­யில்தான் தற்­போது இந்த வழக்­கில் ராஜ்­குந்த்ரா முக்­கிய குற்­ற­வா­ளி­யாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆபாசப் படம் எடுத்து கைபேசி செய­லி­யில் வெளி­யிட்­ட­தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்­பர் வரை ஐந்து மாதத்­தில் அவர் மட்­டும் ரூ.1 கோடியே 17 லட்­சம் சம்­பா­தித்து இருப்­ப­தாக போலி­சார் நீதிமன்றத்தில் தெரி­வித்­த­னர்.

அவ­ரது அலு­வ­ல­கத்­தில் நடத்­திய சோத­னை­யில் 51 ஆபா­ச­பட காணொளிகள் கைப்­பற்றி இருப்­ப­தா­க­வும் போலிசார் கூறியுள்ளனர்.

இதற்கிடையே நடிகை ஷில்பா ஷெட்டி தமக்கு எதிராக அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாக சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மும்பை நீதிபதி திரு பட்டேல், "போலிசார் தகவலை வெளியிடுவது," அவதூறு அல்ல என்றார்.