மகனுடன் சேர்ந்து 'பிளஸ்-1' தேர்வு எழுதிய தாய்

1 mins read
746f5fa6-3664-438a-8920-9dae5f6f089f
தேர்வில் நாங்கள் இருவரும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று 59 வயது சைனா பாபீவியும் அவரது 27 வயது மகன் இர்ஃபானும் கூறியுள்ளனர். படம்: மாலைமலர் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­தில் தாயும் மக­னும் சேர்ந்து பிளஸ்-1 தேர்வு எழு­தி­யுள்­ள­னர்.

எர்­ணா­கு­ளம் அருகே காக்­க­நாடு பகு­தி­யில் வசிக்­கும் 59 வயது சைனா பாபீவி அழ­குக் கலை நிபு­ண­ராக உள்­ளார்.

இவ­ருக்கு படிப்­பின் மீது தீவிர ஆர்­வம் இருந்­த­போ­தி­லும் அவ­ரால் பள்­ளிக் கல்­வியை முடிக்க முடிய வில்லை. இவ­ரது 27 வயது மகன் இர்­ஃபான் தற்­போது அழகு கலை நிறு­வ­னம் நடத்தி வரு­கி­றார்.

ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்பு பள்ளிப் படிப்புத் தேர்­வில் இர்­ஃபான் தோல்வி அடைந்­தார்.

இந்த நிலை­யில் இரு­வ­ரும் எப்­ப­டி­யா­வது பிளஸ்-1 தேர்வு எழுதி வெற்றி பெற வேண்­டும் என்று முடிவு செய்­த­னர். இத­னால் இரு­வ­ரும் வீட்­டில் பாடங்­களை படித்து வந்­த­னர். அப்­ப­கு­தி­யில் உள்ள கற்­றல் நிலை­யத்­தில் சேர்ந்து பிளஸ்-1 படித்து தேர்வு எழுத பயிற்சி பெற்­ற­னர். இந்த நிலை­யில் இரு­வ­ரும் எர்­ணா­கு­ளத்­தில் உள்ள அரசு பள்­ளி­யில் தேர்வு எழு­தி­னர்.

தாயும் மக­னும் ஒரே பள்­ளி­யில் தேர்வு எழு­தி­யது அங்கு வந்­தி­ருந்த பலரை வியப்­பில் ஆழ்த்­தி­யது. "குடும்­பத்­திற்­காக பள்ளிப் படிப்பை முடிக்க முடி­யா­மல் போன­தால் வருத்­த­மாக இருந்­தது. இப்­போது தேர்வு எழு­தி­ய­தால் அந்த வருத்­தம் தீர்ந்­துள்­ளது. தேர்­வில் நானும் எனது மக­னும் நிச்­ச­யம் வெற்றி பெறு­வோம். நான் படிப்­ப­தற்கு எனது கண­வ­ரும் குடும்­பத்­தி­ன­ரும் முழு ஆத­ரவு தந்­த­னர்," என்று சைனா பாபீவி கூறி­யுள்­ளார்.