தேசிய அளவில் மருத்துவ படிப்புக்கு இடஒதுக்கீடு; அமித் ஷா, தமிழக தலைவர்கள் வரவேற்பு

தேசிய அளவில் மருத்துவ படிப்புக்கு இடஒதுக்கீடு; அமித் ஷா, தமிழக தலைவர்கள் வரவேற்பு

2 mins read
c7f60868-23a1-4d2b-8415-6b5a05a9a6a2
-

புது­டெல்லி: தேசிய அள­வில் மருத்­துவப் படிப்­புக்­கான ஒதுக்­கீட்­டில் இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்கு 27 விழுக்­கா­டும் பொரு­ளா­தா­ரத்­தில் நலிந்­த­வர்­க­ளுக்கு 10 விழுக்­கா­டும் இடம் ஒதுக்­கு­வதை இந்த கல்வி ஆண்டே அமல்­ப­டுத்த மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.

அர­சின் இந்த நட­வ­டிக்­கையை மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா வர­வேற்­றுள்­ளார்.

இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் வெளி­யிட்ட தக­வ­லில் "இள­நிலை மற்­றும் முது­நிலை மருத்­துவப் படிப்­பு­களில் இந்­தியா முழு­வ­து­மான ஒதுக்­கீட்­டில் இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வி­ன­ருக்கு இந்த ஆண்டே இட­ஒ­துக்­கீடு வழங்­கும் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க முடிவை எடுத்­த­தற்­காக பிர­த­மர் மோடியை பாராட்­டு­கி­றேன்," என்று திரு அமித் ஷா குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த நீண்­ட­கால கோரிக்­கையை நிறை­வே­றி­யி­ருப்­ப­தால் பிற்­ப­டுத்­தப்­பட்ட பிரி­வி­னர் மற்­றும் பொரு­ளா­தா­ரத்­தில் நலி­வ­டைந்­த­வர்­க­ளின் நலன்­கள் மீதான மத்­திய அர­சின் உறு­திப்­பாட்டை பிர­த­மர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இது குறித்து கருத்து தெரி வித்துள்ள தமி­ழக முதல்வர் மு.க. ஸ்டா­லி­னும் ''பிற்­ப­டுத்­தப்பட்ட சமு­தாய மாண­வர்­க­ளுக்கு மருத்­து­வக் கல்வி கிடைக்­கப்போவதை திமு­க­வின் சட்டரீதி­யான சமூக நீதிப் போராட்­டம் மூலம் உறுதி செய்து சாதனை படைத்­தி­ருக்கிறது'' என்று கூறி­யுள்­ளார்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட் டத்தின் முதல் வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு திமுக, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி உள்­ளிட்ட அனைத்­துக் கட்­சி­களும் உச்ச நீதி­மன்­றத்­தி­லும் சென்னை உயர் நீதி­மன்­றத்­தி­லும் அகில இந்­திய ஒதுக்­கீட்டு இடங்­களில் இதர பிற்­ப­டுத்­தப்பட்ட மாண­வர்­க­ளுக்கு 50 விழுக்காடு இட­ஒ­துக்­கீடு வழங்­கிட வேண்­டு­மென வழக்­கு­கள் தொடுக்­கப்­பட்­டன.

இதனை சுட்­டிக்­காட்­டிய மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் கே.பாலகிருஷ்­ணன், தற்­போது மத்­திய அரசு 27 விழுக்­காடு இட­ஒ­துக்­கீட்டை மட்­டும் அறி­வித்­துள்ள போதி­லும் வர­வேற்­கத்­தக்­கது என்­றார்.