சுகாதார அமைச்சு: இதுவரை 460 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன

1 mins read
91e25610-9a56-4c2c-996d-8f7ea309dfce
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இது­வரை சுமார் 460 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தி­னம் மட்­டும் 5.3 மில்­லி­யன் பேருக்குத் தடுப்­பூசி போடப்­பட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி­யில் இருந்து தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கையை மத்­திய, மாநில அர­சு­கள் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளன.

நாடு முழு­வ­தும் 18 வய­தான அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­படு­கிறது. நேற்று முன்­தி­னம் வரை நாட்­டில் சுமார் 360 மில்­லி­யன் பேருக்கு முதல் தவ­ணை­யா­க­வும் சுமார் 100.6 மில்­லி­யன் பேருக்கு இரண்­டாம் தவ­ணை­யா­க­வும் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே ரஷ்­யா­வின் 'ஸ்புட்னிக்-வி' தடுப்­பூசி உற்­பத்­தி­யா­னது வரும் செப்­டம்­பர் மாதத்­தில் இருந்து இந்­தி­யா­வில் முழு­வீச்­சில் நடை­பெ­றும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் 'ஸ்புட்­னிக்-வி' தடுப்­பூ­சி­யின் முக்­கிய உற்­பத்தி மைய­மாக இந்­தியா உரு­வெ­டுக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.