தடுப்பூசி: ஆண், பெண் இடைவெளி குறைந்தது

தடுப்பூசி: ஆண், பெண் இடைவெளி குறைந்தது

1 mins read
d0863046-65c7-4246-bc14-e88f3046d28b
-

புதுடெல்லி: கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடுவதில் ஆண் - பெண் பாலின இடைவெளி வேறுபாடு குறைந்துவிட்டதாக அரசாங்கத் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதுவரை செலுத்தப்பட்டுள்ள 481 மில்லியன் தடுப்பூசிகளில் 47 விழுக்காடு பெண்களுக்கும், 13 விழுக்காடு கூடுதலாக ஆண்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இடைவெளி ஜூன் மாதத் தொடக்கத்தில் 17 விழுக்காடாக இருந்தது. தடுப்பூசி குறித்து பரவிய கருவுறுதல் பற்றிய வதந்திகள் குறித்த அச்சத்தைப் போக்குவதற்கு மக்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வை அடுத்து அதிகமான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனர்.

அத்துடன் கருவுற்றிருக்கும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கடந்த ஜூலை மாதம்தான் அங்கு அதிகாரபூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பாலின இடைவெளி இப்போது குறைந்துள்ளது.