மும்பை: 'டி-சட்டை'யில் கொரோனா சான்றிதழ்

2 mins read
229e70cc-2488-4670-9394-a376d68d2cd5
தடுப்பூசி சான்றிதழ் அச்சிடப்பட்ட 'டி-சட்டை'யில் நடிகர் அத்துல் கத்ரி. படம்: ஊடகம் -

மும்பை: ரயில்­களில் பய­ணம் மேற்­கொள்ள மும்­பை­வா­சி­கள் கொரோனா தடுப்­பூசி சான்­றி­த­ழைக் காண்­பிக்க வேண்­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து சிலர் அந்­தச் சான்­றி­தழை 'டி-சட்­டை­'களில் அச்­ச­டித்து வலம் வர­லாம் என்ற யோச­னையை வரவேற்­றுள்­ள­னர்.

எதிர்­வ­ரும் சுதந்­திர தினம் முதல் மும்பை புற­ந­கர் ரயில்­களில் கொரோனா தடுப்­பூசி போட்­ட­வர்­கள் பய­ணம் செய்­ய­லாம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­தற்­கான ஆதா­ர­மாக அதற்­கு­ரிய சான்­றிதழை பய­ணச்­சீட்டு வாங்­கும்­போது காண்­பிக்க வேண்­டும் என அரசு அறி­வித்­துள்­ளது.

இதற்­கா­கவே புதிய கைபேசிச் செயலி ஒன்­றை­யும் மகா­ராஷ்­டிர அரசு அறி­மு­கம் செய்­கிறது.

இதை­ய­டுத்து சான்­றி­த­ழைக் காட்­டு­வ­தற்கு என மாற்று வழி­க­ளை­யும் சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

அதில், 'டி-சட்­டை'களில் கொரோனா சான்­றி­த­ழை­ முழுமை­யாக அச்­சி­டு­வ­தும் ஒன்று.

இளை­யர்­கள் மத்­தி­யில் இதற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது. இந்தி நடி­கர் அத்­துல் கத்ரி இந்த 'டி-சட்­டை'யை அணிந்­த­படி காட்­சி­ய­ளிக்­கும் புகைப்­ப­டத்தை டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டுள்­ளார். சான்­றி­த­ழு­டன் பிர­த­மர் மோடி­யின் பட­மும் 'டி-சட்டை'­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இதற்­கி­டையே, மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா தொற்­றுப்­பா­திப்பு வேக­மாக குறைந்து வரு­கிறது. கடந்த திங்­கட்­கி­ழமை அங்கு புதி­தாக 4,505 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறுதி செய்­யப்­பட்­டது.

கடந்த பிப்­ர­வரி மாதம் மகா­ராஷ்­டி­ரா­வில் அன்­றாட தொற்று எண்­ணிக்கை 3,663ஆக பதி­வாகி இருந்­தது. அதன் பிறகு நேற்று முன்­தி­னம் பதி­வா­னதே ஆகக் குறை­வான எண்­ணிக்­கை­யா­கும். மும்­பை­யி­லும் கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­துக்­குப் பிறகு அன்­றாட பாதிப்பு எண்­ணிக்கை 208 என, ஆகக் குறை­வாக பதி­வா­னது.

இதே­போல் உயி­ரி­ழப்­போர் எண்­ணிக்­கை­யும் திங்­கட்­கி­ழ­மை­யன்று குறை­வாக இருந்­தது. மாநி­லத்தில் 63 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர். அன்­றா­டம் பரி­சோ­திக்­கப்­படும் மாதி­ரி­க­ளின் எண்­ணிக்கை குறைந்த­தால்­தான் பாதிப்பு அள­வும் குறைந்­துள்­ளது என ஒரு­த­ரப்­பு சுட்­டிக்­காட்டி உள்­ளது.