உயரதிகாரியாக நியமனம்: மகளுக்கு தந்தை 'சல்யூட்'

1 mins read
27e58798-0e8f-45a9-a5ef-58403d0761bb
-

டேராடூன்: இந்தோ-திபெத் காவல் படை­யில் முதன்­மு­றை­யாக இரண்டு பெண் அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் தீக்­‌ஷா­வும் ஒரு­வர். இதே காவல்­படை­யில்­தான் அவ­ரது தந்தை ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்­று­கி­றார்.

நேற்று முன்­தி­னம் உத்­த­ரகண்ட் மாநி­லத்தில் நடை­பெற்ற பயிற்சி நிறைவு விழா­வில் தீக்­‌ஷா­வுக்­குப் பணி ஆணை வழங்­கப்­பட்­டது. அப்­போது தனக்கு உய­ர­தி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள தீக் ஷாவுக்கு அவ­ரது தந்­தை­யும் கம­லேஷ்­கு­மார் பெரு­மி­தத்­து­டன் சல்­யூட் அடித்­தார். படம்: ஊடகம்