டேராடூன்: இந்தோ-திபெத் காவல் படையில் முதன்முறையாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தீக்ஷாவும் ஒருவர். இதே காவல்படையில்தான் அவரது தந்தை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.
நேற்று முன்தினம் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் தீக்ஷாவுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டது. அப்போது தனக்கு உயரதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தீக் ஷாவுக்கு அவரது தந்தையும் கமலேஷ்குமார் பெருமிதத்துடன் சல்யூட் அடித்தார். படம்: ஊடகம்

