இனி வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி: அரசு அறிவிப்பு

1 mins read
149c937f-cd0e-4019-a147-2507335a2988
-

புது­டெல்லி: இனி இந்­தி­யா­வில் தங்­கி­யுள்ள வெளி­நாட்­டி­ன­ரும் கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள­லாம் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

இத­னால் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக நாட்­டின் பல பகு­தி­களில் தங்கி உள்ள வெளி­நாட்­ட­வர்­கள் நிம்­மதி அடைந்­துள்­ள­னர்.

இந்­திய குடி­மக்­க­ளைப் போலவே வெளி­நாட்­டி­ன­ரும் மத்­திய அரசு கொரோனா தடுப்­பூ­சிக்கு என்றே உரு­வாக்கி உள்ள 'கோவின்' இணை­யத்­த­ளத்­தில் தங்­கள் பெய­ரைப் பதிவு செய்ய முடி­யும்.

இதற்கு தங்­க­ளு­டைய கடப்­பி­தழ் எண்­ணைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றும் பரி­சீ­ல­னைக்­குப் பிறகு பதிவு ஏற்­கப்­படும் பட்­சத்­தில் அரசு ஏற்­பாடு செய்­துள்ள மையத்­துக்­குச் சென்று தடுப்­பூசி போட்­டுக் கொள்­ள­லாம் என்­றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் 'கோவேக்­சின், கோவி­ஷீல்ட், ஸ்புட்­னிக் வி' உள்­ளிட்ட தடுப்­பூ­சி­கள் போடப்­ப­டு­கின்­றன. 'கோவின்' இணை­யத்­த­ளம் மூல­மாக அதற்­கு­ரிய சான்­றி­த­ழை­யும் பதி­வி­றக்­கம் செய்து கொள்­ள­லாம். நாடு முழு­வ­தும் இது­வரை 500 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.