கிருமித்தொற்று 36% கூடியது

கிருமித்தொற்று 36% கூடியது

2 mins read
3c8c7ea6-2b3f-4df5-b551-1d7c5f79882b
-

கோவேக்சின், கோவிஷீல்டு கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்குப் பரிந்துரை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 38,353 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் 497 பேர் பலி­யா­ன­தா­க­வும் மத்­திய சுகா­தாரத்­துறை நேற்று தெரி­வித்­தது.

புதி­தாக ஏற்­பட்ட தொற்று, முந்தைய 24 மணி நேர பாதிப்பை விட 36% அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நாடு முழு­வ­தும் புதி­தாக 28,204 பேருக்கு தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக செவ்­வாய்க்­கி­ழமை அந்­தத்­துறை தெரி­வித்து இருந்­தது.

புதி­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளை­யும் சேர்த்து கிருமி தொற்­றி­யோரின் மொத்த எண்­ணிக்கை 3.2 கோடி­.அன்­றாட பாதிப்பு விகி­தம் 2.16% ஆக இருப்­ப­தா­க­வும் இது கடந்த 16 நாட்­க­ளாக 3%க்கும் குறை­வா­கவே இருந்து வரு­கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர­ண­ம­டைந்­த­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 429,179 ஆகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்­தில் 40,013 பேர் குண­ம­டைந்­த­னர்.

குண­ம­டை­யும் விகி­தம் 97.45% ஆக உள்ளது. மொத்தம் 51.9 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று சுகா­தா­ரத்­துறை கூறி­யது.

இத­னி­டையே, கோவேக்சின், கோவி­ஷீல்டு தடுப்­பூசி மருந்­து­களைச் சேர்த்து பயன்ப­டுத்­த­லாமா என்­ப­தைக் கண்­ட­றிய அனு­மதி வழங்­க­லாம் என்று இந்­திய மத்­திய மருந்து தரக் கட்­டுப்­பாட்டு நிறுவனம் அரசுக்குப் பரிந்­து­ரைத்­துள்­ளது.

இரு வகை­யான கொரோனா தடுப்­பூ­சி­களை ஒரு­வர் பயன்­ப­டுத்­தி­னால் நல்ல பயன் கிடைக்­கும் என அண்­மை­யில் அறிக்கை வெளி யிடப்­பட்­டது. அதை­ய­டுத்து இந்­தப் பரிந்­துரை இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வே­ளை­யில், தென் மாநி­ல­மான கேர­ளா­வில் இந்த மாதம் முதல் தேதி­யில் இருந்து 20ஆம் தேதிக்­குள் ஏறத்­தாழ 4.6 லட்­சம் பேர் தொற்று கார­ண­மாக பாதிக்கப் ­படும் வாய்ப்புள்­ள­தாக அந்த மாநி­லத்­தின் எட்டு மாவட்­டங்­க­ளுக்கு அண்­மை­யில் சென்­று­வந்த மத்­திய வல்­லு­நர்­கள் குழு தெரி­வித்­தது.