கண்ணீருடன் முன்னதாகவே முடிந்த நாடாளுமன்றத் தொடர்

கண்ணீருடன் முன்னதாகவே முடிந்த நாடாளுமன்றத் தொடர்

1 mins read
0ac4d1cf-5574-4725-b754-7ea32c99af0e
-

புது­டெல்லி: இந்­திய நாடாளுமன்றத்­தின் மழைக்­கால கூட்­டத்­தொ­டர், எதிர்க்­கட்­சி­க­ளின் தொடர் அமளி கார­ண­மாக இரண்டு நாட்­கள் முன்­ன­தா­கவே நேற்று முடித்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இத­னி­டையே, மாநி­லங்­க­ளவை தலை­வ­ரான வெங்­கய்யா நாயுடு நேற்று அழுது கொண்டே அவை­யில் பேசினார். மாண்பைக் காக்க உறுப்­பி­னர்­கள் தவ­றி­விட்­ட­தாக கண்­ணீர் மல்க அவர் கூறினார்.

அப்போதும்கூட எதிர்த்தரப்பு உறுப்­பி­னர்­கள் மேசை மீது ஏறி ஆடிப்பாடி அம­ளி­யில் ஈடு­பட்­ட­தால் அவரின் பேச்சைக் கேட்க முடியவில்லை. ஜூலை 19ஆம் தேதி மழைக்­கால கூட்டத்தொடர் தொடங்­கி­யது முதலே பெகா­சஸ் விவ­கா­ரம், வேளாண் சட்­டங்­கள் உள்­ளிட்டவற்றை முன்­வைத்து எதிர்க்­கட்சிகள் தொடர்ந்து அமளி­யில் ஈடுபட்டு வந்­த­ன. இத­னால் மழைக்­கால கூட்டத்தொடரே முடங்கிப்போனது. அவை கூடு­வ­தும் கூச்­சல் குழப்­பம் ஏற்­பட்டு அவை ஒத்திவைக்­கப்­படுவதும் வாடிக்­கை­யாக இருந்­தது.

அமளி ரக­ளை­க­ளுக்கு மத்தி யிலும் பல்­வேறு மசோ­தாக்­களை அரசு நிறை­வேற்­றி­யது. பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­யலை முடிவு செய்­யும் அதி­கா­ரத்தை மீண்­டும் மாநி­லங்­க­ளுக்கே அளிக்­கும் மசோதா மட்டுமே எதிர்க்கட்சி களின் ஆதரவுடன் நிறைவேறியது.