புதுடெல்லி: கொரோனா தொற்று காலத்திலும் இந்திய கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ரூபாய் 100 கோடி மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டியவர்களின் எண்ணிக்கை, கடந்த 2018ஆம் நிதியாண்டில் வெறும் 77 ஆக இருந்தது.
இது 2020ஆம் நிதியாண்டில் 136 ஆகவும் 2021ஆம் நிதியாண்டில் 141 ஆகவும் அதிகரித்து இருப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

