பிரிட்டனுக்கு 13 ஏர் இந்தியா நேரடி சேவை

பிரிட்டனுக்கு 13 ஏர் இந்தியா நேரடி சேவை

1 mins read
f390f1bd-bff7-4742-9bef-6451c25b6d68
-

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு 13 வழிநில்லாச் சேவைகளை அடுத்த வாரம் தொடங்கப் போவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து செல்வோருக்கான தடையை பிரிட்டன் அகற்றியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, அமிர்தசரஸ், கொச்சி ஆகிய நகர்களில் இருந்து 13 வாராந்திர சேவைகள் இம்மாதம் 16 முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை லண்டன் நகருக்கு இயக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது

airindia.in/international travel என்ற இணையத் தளத்திற்குச் சென்று இது பற்றி மேல் வழிகாட்டி நெறிமுறை விவரங்களைத் தெரிந்துெகாள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.