கேரள முதல்வரை மிரட்டியவர் கைது

கேரள முதல்வரை மிரட்டியவர் கைது

1 mins read
b8a11d7e-881e-448b-b504-f595017c0878
-

கோட்டயம்: தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டியதாகக் கூறப்படும் 40 வயது ஆடவரை போலிசார் கைது செய்தனர்.

கோட்டயத்தைச் சேர்ந்த அனில் என்ற அந்த ஆடவர் மனநோயாளி என்பதும் பெரிய பெரிய தலைவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களை மிரட்டுவதே அந்த ஆடவருக்கு வேலை என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அனிலுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.