எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை

2 mins read
4880c9a1-d084-483a-be9a-4967743eaac8
எதிர்க்கட்சித் தலைவர்கள் துணை அதிபர் வெங்கையா நாயுடுவை சந்தித்துப் பேசினர். படம்: ஊடகம் -

மத்திய அமைச்சர்கள்: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாட்டால் நாட்டுக்கு அவமானம்

புது­டெல்லி: நாடா­ளு­மன்ற மழைக்­கா­லக் கூட்­டத்­தொ­டரை ஒத்தி வைத்து மத்­திய அரசு சர்­வா­தி­கார மனப்­பான்­மை­யு­டன் செயல்­பட்­டுள்­ள­தாக காங்­கி­ரஸ் உள்­ளிட்ட 13 எதிர்க்­கட்­சி­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளன.

மழைக்­கால கூட்­டத்­தொ­டரை மத்­திய அரசு வேண்­டு­மென்றே திசை திருப்­பி­ய­தா­க­வும் அவை குற்­றம்­சாட்டி உள்­ளன.

டெல்­லி­யில் நேற்று 12 எதிர்க் ­கட்சித் தலை­வர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னார் காங்­கி­ரஸ் எம்பி ராகுல். அதன் பின்­னர் கூட்­ட­றிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட்­டது.

அதில், தொலை­பேசி ஒட்டுக்­கேட்பு விவ­கா­ரம் போன்ற முக்­கி­ய­மான தேசிய பிரச்­சி­னை­களை விவா­திக்­கும்­படி எதிர்க்­கட்­சி­கள் ஒரு­ம­ன­தாக தெரி­வித்த போதி­லும், மத்­திய அரசு அதற்கு செவி­சாய்க்­க­வில்லை எனக் குறிப்­பிட்­டுள்­ளது.

மத்­திய அர­சுக்கு எதி­ரா­கக் குரல் கொடுத்த எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள், உறுப்­பி­னர்­க­ளைக் கையாள்­வ­தற்­காக நாடா­ளு­மன்ற பாது­காப்­பிற்கு என வெளி­யாட்­கள் அழைத்து வரப்­பட்­ட­தா­க­வும் அந்த அறிக்கை தெரி­விக்­கிறது.

சில எம்­பிக்­கள் தாக்­கப்­பட்­ட­தா­க­வும் எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்டி உள்­ளன.

இந்­நி­லை­யில், நாடா­ளு­மன்­றத்­தில் நடந்­து­கொண்ட விதத்­துக்­காக எதிர்க்­கட்­சி­கள் மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்று மத்­திய அமைச்­சர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

"நாட்டு மக்­கள் தங்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண அர­சாங்­கத்­திற்கு ஒரு பொறுப்பு வழங்கி உள்­ள­னர். ஆனால், நாடாளு­மன்­றத்தை செயல்­பட விடா­மல் எப்­படி எதிர்க்­கட்­சி­கள் முற்­றி­லும் சீர்­கு­லைக்­கின்­றன என்­பதை நாம் அனை­வ­ரும் பார்த்­தோம்.

"எதிர்க்­கட்­சி­கள் இப்­போது முத­லைக் கண்­ணீர் வடிப்­ப­தற்­குப் பதி­லாக, அவ­மா­னத்தை உணர்ந்து, நாட்டு மக்­க­ளி­டம் மன்­னிப்பு கேட்க முன்­வர வேண்­டும்," என்று மத்­திய அமைச்­சர் அனு­ராக் தாகூர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

எதிர்க்­கட்­சி­கள் நடந்­து­கொண்ட விதம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களாக இருப்­ப­வர்­க­ளுக்கு மிக­வும் பொருத்­த­மற்ற செயல் என்று மத்­திய அமைச்­சர் பியூஷ் கோயல் தெரி­வித்­துள்­ளார். சில எம்­பிக்­கள் கத­வு­களை உடைத்­த­னர் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"சில எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் அவை பாது­கா­வ­லர்­க­ளு­டன் முரட்­டுத்­த­ன­மாக நடந்­து­கொண்­ட­னர். ஒரு பெண் பாது­கா­வ­லரை காயப்­ப­டுத்­தி­னர், இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத செயல்­பாடு. அவர்­கள் ஒட்­டு­மொத்த தேசத்­திற்­கும் அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர்," என்றார் அமைச்­சர் பியூஷ் கோயல்.

வெங்கையா, எதிர்க்கட்சியினர் சந்திப்பு

புது­டெல்லி: நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலங்களவை தலைவரும் துணை அதிபருமான வெங்கையா நாயுடுவை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். அப்போது மாநிலங்களவையில் நடந்த சம்பவங்கள் குறித்து அவரிடம் எடுத்துரைத்தனர்.

அண்மையில் மாநிலங்களவையில் நிகழ்ந்த சம்பவங்களால் மிகவும் வேதனை அடைந்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, தனது வேதனையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும் கண்ணீருடன் கூறினார். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற பேரணியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் துணை அதிபர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியது குறித்தும் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.