'பிரிவினை கொடுமைகளை நினைவுகூரும் நாள்'

'பிரிவினை கொடுமைகளை நினைவுகூரும் நாள்'

2 mins read
dbd794ae-836d-4982-b20a-2bb13d38afdf
-

புதுடெல்லி: இந்தியா சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு முதல்நாளான நேற்று பாகிஸ்தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி 'பிரிவினை கொடுமைகளை நினைவுகூரும் தினமாக' அனுசரிக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, 'பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது' என்று கூறியுள்ளார்.

சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை 'பிரிவினை கொடுமைகளை நினைவுகூரும் நாள்' நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தப் பிரிவினை ஆயிரக்

கணக்கான இந்துக்களையும் முஸ்லிம்களையும் புலம் பெயரச்செய்தது, பிரிவினை, மதக் கலவரங்களோடு கொலை, கொள்ளை மற்றும் பிற பயங்கரமான நினைவுகளை உள்ளடக்கியதாகவும் அமைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

75வது இந்திய சுதந்திர தினம்

இதற்கிடையே இந்தியாவில் இன்று 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்

படுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லி

யிலும் காஷ்மீரிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியை முறியடிக்க பல்வேறு இடங்களில் துணை ராணுவப் படையினரும் போலிசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரவு, பகலாக போலிசார் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாடகை வீடுகளில் குடியிருப்போர் உரிய அடையாள சான்று வைத்திருக்கின்றனரா என்று வீட்டு உரிமையாளர்கள் சோதிக்கும்படியும் டெல்லி போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.

தாக்குதல் முயற்சி முறியடிப்பு

இதற்கிடையே, ஜம்மு-காஷ்

மீரின் குல்காம் மாவட்டத்தில் போலிஸ் படை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் மாநில உயர் போலிஸ் அதிகாரி விஜயகுமார் கூறினார்.

காஷ்மீர் நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தேடுதல் வேட்டையில் தீவிரவாதி கொல்லப்பட்டதால் அங்கு நடக்கவிருந்த அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.