பனாஜி: சுதந்திர தினத்தை ஒட்டி இந்தியா முழுவதிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுவது நேற்று முன்தினம் முதல் தொடங்கி யது. அதன்படி கோவா மாநிலத்திற்கு உட்பட்ட சாவோ ஜசின்டோ தீவில் கடற்படை சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கொடியேற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்தத் தகவலை அறிந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், திட்டமிட்டபடி சாவோ ஜசின்டோ தீவில் தேசிய கொடியை ஏற்றும்படி கடற் படை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் அவர் கடுமையாக எச்சரித்து உள்ளார்.

