பஞ்சாப்பிற்குச் செல்ல தடுப்பூசி அவசியம்

பஞ்சாப்பிற்குச் செல்ல தடுப்பூசி அவசியம்

1 mins read
e4d0848f-2120-4b9a-8847-6ac1e9c05037
நாளை முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அல்லது கொவிட்-19 இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே பஞ்சாப்பிற்குள் நுழைய முடியும். படம்: இணையம் -

அமிர்தசரஸ்: தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அல்லது கொவிட்-19 இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி பஞ்சாப்பிற்குள் நுழைய முடியும்.

அண்டை மாநிலங்களிலும் தொற்று சம்பவங்கள் அதிகரித்து உள்ள நிலையில் நாளை முதல் இது நடைமுறைக்கு வருவதாக மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளளார்.

அண்டை மாநிலங்களான இமாச்சல பிரதேசம், ஜம்முவில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

அதுபோல் பஞ்சாப்பில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட அல்லது தொற்றிலிருந்து குணமடைந்த ஆசிரியர்கள், ஊழியர்களே பள்ளி மற்றும் கல்லூரி

களுக்கு நேரடியாக வேலைக்குச் செல்ல முடியும்.

மேலும் தடுப்பூசி போடுவதில் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்

களுக்கு முன்னிலையளிக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதோடு பள்ளி மாணவர்களிடையே தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிகளில் இருந்து நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைப் பரிசோதனை செய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பஞ்சாப்பில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.2% என சற்றே அதிகரித்துள்ளது.