புதுடெல்லி: கொவிட்-19 சூழலால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள வேளையில், விரைவில் பள்ளி
களைத் திறக்க உத்தரவிடுமாறு மாணவி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் வழக்கறிஞர் அமர் பிரேம் பிரகாஷ் என்பவர் மூலம் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "கடந்த 2 ஆண்டு
களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள்
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
"வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை
களுக்கு இணைய வகுப்பிற்குத்தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், குழந்தைகளுக்குக் கல்வி என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.
"ஏற்கெனவே வறுமையில் வாடிய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இணைய வகுப்புக்குச் செல்ல முடியாமல், குழந்தை தொழிலாளர் நிலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
"எனவே, பள்ளிகளை விரைவாக திறந்து மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தர விடவோ, வழிகாட்டலையோ வரை யறுக்க வேண்டும். இது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்," என கூறப்பட்டிருந்தது.

