இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் உள்கட்டமைப்பையும் பொருளியலையும் மேம்படுத்த மிகப்பெரிய திட்டத்தை செயல் படுத்தப் போவதாக அறிவித்து உள்ளார். அந்தத் திட்டத்தின்படி சுமார் 100 லட்சம் கோடி ரூபாய் ( S$1.8 டிரில்லியன்) செலவில் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம் படுத்தப்படும். இதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். நாட்டின் பருவநிலை மாற்ற இலக்கை எட்ட தூய்மையான எரிபொருளின் பயன்பாடு அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
"'கடி ஷக்தி' எனும் அந்தத் திட்டம், தொழில்துறைகளில் உற்பத்தியைப் பெருக்கி பொருளியலுக்கு புதிய உத்வேகத்தைத் தருவதால் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாகும்," என்று டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் அறிவித்தார்.
இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவில் அவர் பேசினார். திட்டத்தின் விவரங்களை அவர் வெளியிடவில்லை.ஆனால் உள்ளூர் தொழில்துறைகள் உலக அளவில் போட்டித் திறனுடன் செயல்பட்டு பொருளியல் வளர்ச்சிக்குப் புதிய எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆசியாவின் 3வது ஆகப் பெரிய பொருளியலைக் கொண் டிருக்கும் இந்தியாவை கொள்ளை நோய் பாதிப்பிலிருந்து மீட்டெக்கும் திட்டமாகவும் இது இருக்கும்.
கடந்த நிதியாண்டில் இந்தியா வின் பொருளியல் இதுவரை இல்லாத அளவுக்கு 7.3 விழுக் காட்டுக்குச் சரிந்தது. கொவிட்-19 2வது அலை காரணமாக பொரு ளியல் மீட்சி மேலும் தாமத மானது. வரும் 2047ல் எரிசக்தி யில் தன்னிறைவைப் பெறவும் திரு மோடி இலக்கு நிர்ணயித்து உள்ளார். எரிவாயு அடிப்படையி லான பொருளியலை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக நாட்டை மாற்றுவது அவரது திட்டமாகும்.
இதற்கிடையே இந்தியாவின் 75வது சுதந்திர தினத்துக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
"பொருளியல், பாதுகாப்பு, இரு நாட்டு மக்களின் தொடர்பு உள்ளிட்ட வலுவான அடிப்படை யில் இரு நாடுகளின் நீண்டகால உறவு அமைந்துள்ளது," என்று இந்திய அதிபர் ராம் நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
வரப்போகும் ஆசியான்-இந்தியா கலந்துரையாடலைச் சுட்டிக்காட்டிய அதிபர் ஹலிமா, இவ்வட்டாரத்தில் இந்தியாவின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்ய சேர்ந்து செயல்படுவதை சிங்கப் பூர் எதிர்பார்ப்பதாக அதிபர் ஹலிமா தெரிவித்தார்.

