தான்பாத்: தலைமை நீதிபதி கொல்லப்பட்டது குறித்து முக்கிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாவட்டத்தில் வசித்து வந்த தலைமை நீதிபதி உத்தம் ஆனந்த் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது, அவரது பின்புறம் வந்த ஆட்டோ ரிக்ஷா அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் நீதிபதி உயிரிழந்தார்.
இந்நிலையில், முதலில் இது விபத்து என்று காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டதில் அது கொலை என உறுதியானது.
இதனையடுத்து இந்த சம்பவத்தின் உண்மை நிலை ையக் கண்டறிய சிபிஐ தீவிர விசாரணை செய்து வருகிறது.
இச்சம்பவம் குறித்து ஜார்கண்ட் மாநில அரசு, ஜார்க்கண்ட் மாநில தலை மைச் செயலாளர், தலைமை போலிஸ் அதிகாரி ஆகியோர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளதை அடுத்து கொலை குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

