அனைத்து வயநாட்டு இளைஞர்களுக்கும் தடுப்பூசி

அனைத்து வயநாட்டு இளைஞர்களுக்கும் தடுப்பூசி

1 mins read
310d87a1-7a96-44d8-ac18-260e786cd520
-

திரு­வ­னந்­த­பு­ரம்: வய­நாடு மாவட்­டத்­தில் உள்ள அனைத்து இளை­ஞர்­க­ளுக்­கும் முதல் தவணை கொரோனா தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ள­தாக அம்­மா­நில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கொரோ­னா­வால் அதி­கம் பாதித்த மாநி­லங்­களில் கேர­ளா­வும் ஒன்று. அங்கு தற்­போது நாள்­தோ­றும் 18,000க்கும் மேற்­பட்­டோ­ருக்கு தொற்று உறு­தி­யாகி வரு­கிறது. இத­னால் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு, தடுப்­பூசி போடும் பணி துரி­த­மாக செயல்­படுத்­தப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில், கேரள மாநி­லம் வய­நாட்­டில் உள்ள அனைத்து இளை­ஞர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ள­தாக அம்­மா­நில சுகா­தா­ரத் துறை அமைச்­சர் வீணா ஜார்ஜ் தெரி­வித்­துள்­ளார். வய­நாட்­டில் 651,000 பேருக்கு தடுப்­பூசி செலுத்த இலக்கு நிர்­ண­யித்து, தற்­போது 616,000 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது.

அத்துடன், பிற நோயுடன் படுக்­கை­யில் இருந்­த­வாறு சிகிச்சை பெற்று வரும் 636 பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது என்றும் இத­னால் விரை­வில் தொற்று கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என்றும் சுகா­தா­ரத் துறை தெரி­வித்துள்ளது.