குணம் அடைந்தோர் அதிகரிப்பு; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது இந்தியாவில் 154 நாட்களுக்குப் பிறகு கிருமி பாதிப்பு சரிந்தது

குணம் அடைந்தோர் அதிகரிப்பு; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது இந்தியாவில் 154 நாட்களுக்குப் பிறகு கிருமி பாதிப்பு சரிந்தது

2 mins read
da1ebca9-f264-466b-999a-5ae2428c92b4
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் மூன்றாவது அலை காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படும் ஒரு சூழல் ஏற்பட்டால் அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பது குறித்து ஒரு தாதி மற்ற தாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறார். படம்: இபிஏ -

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கொரோனா பாதிப்பு 154 நாட்களுக்குப் பிறகு 25,166 ஆகக் குறைந்துள்ளது. அத்துடன், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்வாய்ப் பட்டவர்களைக் காட்டிலும் குண மடைந்தவர்கள் எண்ணிக்கையும் 36,830 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கையும் 369,846 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த 146 நாட்களில் குறைவான எண்ணிக்கை என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக ஓய்ந்து வந்த நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டு வந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தக வலின் அடிப்படையில், "இந்தியாவில் 1,563,985 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,166 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த 154 நாட்களில் பதிவான மிகக் குறைவான கிருமி பாதிப்பு இது.

"இதன்மூலம் மொத்த கிருமி பாதிப்பு எண்ணிக்கை 32,250,679 ஆக அதிகரித்துள்ளது.

"அதேபோல், தொற்று பாதிப்பு களுக்கு ஒரே நாளில் 437 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 432,079 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

"கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,830 பேர் குணம் அடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,448,754 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.51% ஆக உயர்ந்துள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.