பத்து மொழிகளில் திருக்குறள் வெளியீடு

பத்து மொழிகளில் திருக்குறள் வெளியீடு

2 mins read
6d3ccc3a-c87b-4154-882d-552445a511db
-

புது­டெல்லி: சாதி, மதம், மொழி, நாடு என்று எந்த ஒரு வேறு­பா­டும் இன்றி மக்­கள் அனை­வ­ருக்­கும் பொருந்­து­வ­தாக உள்­ள­தால் உலக பொது­மறை என்று அழைக்­கப்­ப­டு­கிறது திருக்­கு­றள்.

இந்­தத் திருக்­கு­ற­ளின் மொழி பெயர்ப்­பு­கள் நரிக்­கு­றவா் இன மக்­கள் பேசும் 'வாக்­ரி­போலி' மொழி உள்­பட பத்து மொழி­களில் வெளி­யி­டப்­பட உள்­ள­தாக செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

வரும் அக்­டோபா் மாதத்­தில் மலை­யா­ளம், மராத்தி, ஒடியா, ஹிந்தி, நேபாளி, உருது, அரபி, பார­சீ­கம், வாக்­ரி­போலி, படுகு ஆகிய 10 மொழி­களில் திருக்­கு­றள் மொழி­பெ­யா்­ப்­பு­கள் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தா­க­வும் இந்த நிறு­வ­னம் குறிப்­பிட்­டுள்­ளது.

இது­கு­றித்து செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்­தின் இயக்­குநா் பேரா­சி­ரியா் இரா.சந்­தி­ர­சே­க­ரன் அறிக்கை வெளி யிட்­டுள்­ளார்.

அதில், "மத்­திய கல்வி அமைச்சு திருக்­கு­றளை 21 மொழி­களில் மொழி­பெ­யா்­க்­கும் திட்­டத்­தைச் செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்­துக்கு வழங்­கி­யுள்­ளது.

"இந்த நிறு­வ­னம், ஏற்­கெனவே பஞ்­சாபி (2012), மணிப்­புரி (2012), தெலுங்கு (2014), கன்­ன­டம் (2014), குஜ­ராத்தி (2015) ஆகிய மொழி­களில் திருக்­கு­றள் மொழி­பெ­யா்­ப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளது.

"அத்­து­டன், திருக்­கு­ற­ளின் ஆங்­கில மொழி­பெ­யா்ப்பு தொகுப்பு களை­யும் மூன்று பாகங்­க­ளாக வெளி­யிட்­டுள்­ளது.

"இதன் தொடா்ச்­சி­யாக வரும் அக்­டோபா் மாதம் மலை­யாளம், மராத்தி உள்­ளிட்ட 10 மொழி­களில் திருக்­கு­றள் மொழி­பெயா்­ப்­பு­கள் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன.

"இது­த­விர மொழி­பெ­யா்­ப்­புத் திட்­டத்­தின் மூல­மா­க­வும் குறுந்­திட்ட ஆய்­வு­கள் மூல­மா­க­வும் கிடைக்­கப் பெற்­றுள்ள ஆய்­வு­கள் செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வ­னத்­தின் மூலம் நூலாக்­கம் பெற்று வரு­கின்­றன.

அந்த வகை­யில் உ.வே.சாமி­நா­தையா் நாட்­கு­றிப்பு, உ.வே.சாமி­நா­தையா் அருஞ்­சொல் அக­ராதி, சங்­க­நூல் சொல்­லடை, நற்­றிணை (கன்­னட மொழி­பெயா்ப்பு), தொல்­காப்­பி­யம் (ஹிந்தி மொழி­பெ­யா்ப்பு), பதிற்­றுப்­பத்து (கன்­னட மொழி­பெ­யா்ப்பு) ஆகி­யவை உள்­ளிட்ட 20 நூல்­கள் வரும் செப்­டம்பா் மாதம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன," என தெரி­வித்­துள்ளாா்.