500 ரூபாயில் சிறைச் சுற்றுலா

1 mins read
1bb980f4-54b1-4986-89c2-913b74983eeb
-

பெல­காவி: சிறை வாழ்க்கை எப்­படி இருக்­கும் என்று அறிந்­து­கொள்ள ஆசைப்­ப­டு­வோர் 500 ரூபாய் (S$9.15) மட்­டும் செல­வ­ழித்­தால் போதும், தங்­க­ளின் ஆவ­லைத் தீர்த்­துக்­கொள்­ள­லாம்.

அதற்­காக, அவர்கள் எந்­தக் குற்­றச் செய­லி­லும் ஈடு­ப­டத் தேவை­ இல்லை, நீதி­மன்­றத்­தின் படி­யே­ற­வும் வேண்டாம்.

குளு­குளு மலை­வா­ழி­டங்­க­ளுக்­குச் செல்­வ­தைப்­போல, சிறைக்­கும் சுற்­றுலா செல்­லும் வகை­யில் 'கைதி­யைப்­போல் ஒரு நாள்' திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தவுள்­ளது கர்­நா­டக மாநி­லம், பெல­கா­வி­யில் உள்ள ஹிண்­டல்கா மத்­திய சிறைச்­சாலை.

அதே நேரத்­தில், சிறைக்­குச் சுற்­றுலா வரு­வோ­ரும் மற்ற கைதி­களைப் போலவே நடத்­தப்­ப­டு­வர் என்று சிறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கைதிச் சீருடை, கைதி எண், கைதி­கள் உண்­ணும் உணவு, அறை­க­ளைப் பகிர்ந்து­கொள்­வது, கைதி­க­ளைப்­போல தோட்ட வேலை, சமை­யல், துப்­பு­ரவு என்று 24 மணி நேரத்­திற்கு அவர்­களும் கைதி­களைப் போலவே நடத்­தப்­ப­டு­வர்.

"சிறைச்­சா­லைக்­குச் சுற்­றுலா வரு­வோரை காலை 5 மணிக்கு சிறைக்­கா­வ­லர்­கள் எழுப்­பி­வி­டு­வர். எழுந்­த­தும் தங்­க­ளது அறை­க­ளைச் சுத்­தம் செய்ய வேண்­டும். பின்­னர் தேநீ­ரும் அதன்­பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உண­வும் தரப்­படும். முற்­ப­கல் 11 மணிக்கு சோறும் சாம்­பா­ரும் இரவு 7 மணிக்கு இரவு உண­வும் வழங்­கப்­படும்," என்று சிறைச்­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

வேலை முடிந்­த­பின் சுற்­றுப்­பயணி­க­ளுக்குப் பாய் தரப்படும். அவர்கள் மற்ற கைதி­க­ளு­டன் தரை­யில் பாயை விரித்­துப் படுக்க வேண்­டும். அவர்­களும் மற்ற கைதி­களைப்­போல் அறை­களுக்­குள் தள்­ளப்­பட்டு பூட்­டப்­ப­ட­லாம்.

அர­சாங்­கத்­தின் ஒப்­பு­த­லுக்­காகக் காத்­தி­ருப்­ப­தால் இன்­னும் இத்திட்­டம் நடை­மு­றைக்கு வர­வில்லை.