மோடி செல்வாக்கு 24 விழுக்காடாகச் சரிந்தது

மோடி செல்வாக்கு 24 விழுக்காடாகச் சரிந்தது

1 mins read
d03a073c-2666-4eb2-9ba3-a801a5906472
-

புது­டெல்லி: கடந்த ஆண்­டில் 66 விழுக்­கா­டாக இருந்த இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடியின் செல்­வாக்கு, ஒரே ஆண்டில் 24 விழுக்­கா­டா­கக் குறைந்­து­விட்­ட­தாக 'இந்­தியா டுடே' ஊட­கம் மேற்­கொண்ட கருத்­தாய்வு முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன. கொவிட்-19 நெருக்­க­டியை அவர் கையாண்ட விதமே இதற்கு முக்­கி­யக் கார­ணம் என்று 'நாட்­டின் மன­நிலை' என்ற அந்தக்­ க­ருத்­தாய்வு கூறு­கிறது. விலை­வாசி உயர்வு, பண­வீக்­கம், வேலை­யின்மை விகி­தம் ஆகி­யவை மோடி தலை­மை­யி­லான அர­சின் பெரும் தோல்­வி­க­ளாக ஆய்­வில் பங்­கேற்­றோர் கூறி­னர். அதே நேரத்­தில், இப்­போது பொதுத் தேர்­தல் நடந்­தா­லும் பாஜக 298 தொகு­தி­களில் வெல்லும் என்றும் கருத்தாய்வு முடிவுகள் கூறுகின்றன.